Automobile Tamilan

இரண்டு நாட்களில் 8 லட்சம் வாகனங்கள் விற்பனை : பி.எஸ் 3 தடை எதிரொலி

பி.எஸ் 3 க்கு எதிராக உச்சநீதிமன்றம் விதித்த அதிரடி தடையை தொடர்ந்து மார்ச் மாதத்தின் இறுதி நாட்களில் நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பிஎஸ் 3 தடை எதிரொலி

உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்)  அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக தெரிவித்திருந்தது.

பெரும்பாலான இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் ரூபாய் 5,000 தொடங்கிஅதிகபட்சமாக ஒருசில தயாரிப்பாளர்கள் ரூபாய் 30000 வரை குறைந்த சிசி கொண்ட பைக்குகளுக்கு வழங்கிய நிலையில் பிரிமியம் மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்கள் அதிகபட்சமாக ரூபாய் 3 லட்சம் வரை சலுகைகள் வழங்கினர் , ஒரு சில டீலர்கள் சிபிஆர் 250 ஆர் பைக் வாங்கினால் ஹோண்டா நவி மினி பைக்கை இலவசமாக வழங்கி உள்ளனர். மேலும் வர்த்தக பயன்பாட்டு வாகனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டது.

நாட்டில் உள்ள பெருவாரியான டீலர்கள் கைவசம் இருந்த பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக உறுதியாகியுள்ள நிலையில் மார்ச் 30, மார்ச் 31ந் தேதி என  இரு நாட்களில் நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் இருசக்கர வாகனங்கள் , கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றது.

தீபாவளி மற்றும் தசரா போன்ற பண்டிகைகளை காட்டிலும் இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றிலே மாபெரும் சலுகைகள் மற்றும் அதிகப்படியான விற்பனையை மாரச் மாத இறுதி நாட்கள் பதிவு செய்துள்ளது. ஹீரோ போன்ற மிகப்பெரிய நிறுவனத்தின் மாதந்திர சராசரி விற்பனையை அதிகபட்சமாக 6 லட்சம்தான்.

முழுமையான விற்பனை அறிக்கை அடுத்த சில நாட்களில் வெளியாகும்.. இணைந்திருங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன்……………..

 

Exit mobile version