Automobile Tamilan

பி.எஸ் 3 பைக்குகளை வாங்கலாமா..?

பி.எஸ் 4 நடைமுறைக்கு வருவதனால் பி.எஸ் 3 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு அதிரடி சலுகைகளை மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் வழங்கி வருகின்றனர். எனவே பி.எஸ் 3 வாங்கலாமா..! என்ற சந்தேகத்திற்கு பதில் இங்கே..!

பி.எஸ் 3 என்றால் என்ன ?

யூரோ 3 மாசு விதிகளை அடிப்படையாக கொண்ட பாரத் ஸ்டேஜ் என அழைக்கப்படுகின்ற பி.எஸ் 3 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு உரிய மாசு உமிழ்வினை வெளிப்படுத்தும் வகையிலான என்ஜின்களை பி.எஸ் 3 என பட்டியலிடப்படுகின்றது.

பைக்குகள் மட்டுமல்ல கார்கள் , மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களை மார்ச் 31க்குள் பதிவு செய்து கொள்ளலாம். ஏப்ரல் 1 முதல் பி.எஸ் 4 நடைமுறை நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுதவதனால் அனைத்து வாகனங்களும் பாரத் ஸ்டேஜ் நான்கு தரத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

பி.எஸ் 3 வாகனங்களை வாங்கலாமா..?

நாம் 2005 முதல் பயன்பயடுத்தி வருகின்ற வாகனங்கள் அனைத்தும் பி.எஸ் 3 மாசு விதிகளுக்கு ஏற்ற தரத்தை கொண்டவையே ஆகும். இவற்றை பயன்படுத்துவதில் எவ்விதமான பிரச்சனைகளும் தவறுகளும் இல்லை.

அனைத்து நகரங்களில் பி.எஸ் 3 வாகனங்களை பயன்படுத்தலாம். 10 வருடங்கள் பழமையான வணிக வாகனங்கள் மற்றும் டீசல் கார்கள் போன்றவை மட்டுமே பயன்படுத்த டெல்லி மெட்ரோவில் தடை செய்யப்பட்டடுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு நாட்டில் எந்த பகுதியிலும் தடை விதிக்கப்படவில்லை..! விதிக்கப்படும் வாய்ப்புகளும் இல்லை.. எனவே இந்த வாகனங்களை தாரளமாக வாங்கலாம். ஆனால் மார்ச் 31ந் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பிஎஸ3 என்ஜின் பாதிப்பு ஏற்படுமா ?

நமது சந்தையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வரும்அனைத்து வாகனங்களுமே பி.எஸ்3 என்ஜின்களே இவற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

பி.எஸ் 3 ஏன் வேண்டாம்..!

சுற்றுசூழல் மீது ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் பி.எஸ் 3 வாகனங்களை தவிரக்கலாம். மேலும் ஏஹெச்ஒ என அழைக்கப்படுகின்ற எந்த நேரமும் ஒளிரும் வகையிலான விளக்குகள் ஏப்ரல் 1 முதல் நிரந்தரமாக ஒளிரும் முகப்பு விளக்குகள் சேர்க்கப்பட்டிருக்கும் இதுபோன்ற சிலவற்றை பி.எஸ் 3ல் பெற இயலாது.

வாகனங்களுக்கு அதிரடி சலுகைகள் 

ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளது.

மேலும் டுகாட்டி போன்ற பிரிமியம் பைக் தயாரிப்பாளர் தங்களுடைய மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.2.7 லட்சம் வரை சலுகைகள் வழங்கியுள்ளனர். ட்ரையம்ப் நிறுவனத்தின் க்ரூஸர் பைக்குகளுக்கு ரூ. 3 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

வர்த்தக வாகனங்களுக்கு மஹிந்திரா நிறுவனம் ரூ. 3 லட்சம் வரை விலை சலுகையை வழங்கி வருகின்றது.

நினைவில் கொள்ளுங்கள்…இன்று அதாவது மார்ச் 31ந் தேதி வரை மட்டுமே பி.எஸ் 3 வாகனங்களை புதிதாக பதிவு செய்ய இயலும்….! தற்காலிக பதிவே போதுமானதாகும்.

Exit mobile version