Automobile Tamilan

புதிய கார்கள் 2016 – எம்பிவி

2016யில் வரவுள்ள புதிய கார்கள் மாடல் விலை , வருகை விபரம் போன்னவற்றை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். எம்பிவி பிரிவில் புதிய கார்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது.

2016-Toyota-Innova

  1. டொயோட்டா இன்னோவா

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவி கார் முற்றிலும் மேம்படுத்தப்பட்டு பல நவீன வசதிகளை பெற்றுள்ளது. மேலும் புதிய 148 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மெனுவல் தவிர ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் வரவுள்ளது.

வருகை : ஜூலை 2016

விலை : ரூ.14.50 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : லாட்ஜி ஸ்டெப்வே

2. செவர்லே ஸ்பின்

ஜிஎம் நிறுவனத்தின் செவர்லே ஸ்பின் எம்பிவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான என்ஜின் ஆஃஷனிலும் வரவுள்ளது.

வருகை : இறுதி 2016

விலை : ரூ.9.50 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : லாட்ஜி , எர்டிகா , மொபிலியோ

3. டாடா ஹெக்ஸா

டாடா ஆரியா காரினை அடிப்படையாக கொண்ட ஹெக்ஸா கிராஸ்ஓவர் ரக எம்பிவி காரில் 154பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் வேரிகோர் 400 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மெனுவல் கியர்பாக்ஸ் மட்டுமல்லாமல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரலாம்.

வருகை : ஏப்ரல் 2016

விலை : ரூ.12.00 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : லாட்ஜி , இன்னோவா , எக்ஸ்யூவி500

4. மாருதி எர்டிகா டிரஸா

இந்தோனேசியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய முகப்பு தோற்றத்துடன் வந்துள்ளது . மேலும் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் 4 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுசூகி டிரஸா வருமா எனபது உறுதியாகவில்லை.

வருகை : பிப்ரவரி 2016

விலை : ரூ.10.00 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : லாட்ஜி , மொபிலியோ

5. ஹூண்டாய் ஹெக்ஸா ஸ்பேஸ்

ஹூண்டாய் நிறுவனத்தின் ஹெக்ஸா என்ற எயரில் தயாராகும்  புதிய எம்பிவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் வரலாம்.

வருகை : இறுதி 2016

விலை : ரூ.9.00 லட்சத்தில் தொடங்கும்

போட்டியாளர்கள் : லாட்ஜி , மொபிலியோ , எர்டிகா

6. டொயோட்டா ஹைஏஸ்

டொயோட்டா ஹைஏஎஸ் எம்பிவி வேன் பிரிமியம் டாக்சி சந்தையை குறிவைத்து விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.  டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் வரவுள்ளது.

வருகை : இறுதி 2016

Exit mobile version