Site icon Automobile Tamilan

புதிய பஜாஜ் பைக் ஸ்பை படங்கள்

டிஸ்கவர் வரிசைக்கு மாற்றாக புதிய பஜாஜ் பைக் கம்யூட்டர் பைக்கினை களமிறக்கலாம் என தெரிகின்றது. இந்த புதிய பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

சோதனை ஓட்ட படத்தில் க்ரூஸர் ஸ்டைலில் இருப்பது தெளிவாக தெரிகின்றது. க்ரூஸர் ஸ்டைலில் அமைந்துள்ள கம்யூட்டர் பைக்கில் 150சிசி என்ஜின் 15 Bhp ஆற்றலை தரும் வகையில் பொருத்தப்பட்டிருக்கலாம்.

ஸ்போர்ட்டிவ் டிசைனுடன் நேர்த்தியாக அமைந்துள்ள இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க் நேர்த்தியாக அமைந்துள்ளது. இருக்கையின் ஸ்டைல் அவென்ஜர் பைக்கின் சாயலில் இருந்தாலும் க்ரூஸர் சாயலில் அமைந்துள்ளது.

அவென்ஜர் சாயிலை அமைந்துள்ள இந்த பைக்கில் 100சிசி , 125சிசி மற்றும் 150சிசி என்ஜின் போன்ற ஆப்ஷன்களில் இந்த பைக் வரலாம். டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பஜாஜ் ஆட்டோ பங்கேற்கவில்லை என்பதனால் இந்த பைக் பற்றி எந்த அறிவிப்பும் உடனடியாக வெளியாக வாய்ப்பில்லை. இந்த பைக் அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு வரலாம் என தெரிகின்றது.

imagesource: bikewale

Exit mobile version