Site icon Automobile Tamilan

மகிந்திரா இம்பிரியோ பிக்அப் ஜனவரி 6 முதல்

வரும் ஜனவரி 6ந் தேதி மகிந்திரா இம்பிரியோ பிக்அப் வாகனம் விற்பனைக்கு வருகின்றது. ஜினியோ பிக்அப் வண்டியின் மேம்படுத்தப்பட்ட மாடலே மகிந்திரா இம்பிரியோ ஆகும்.

மஹிந்திரா சிறிய ரக வர்த்தக வாகன பிரிவால் அறிமுகம் செய்யப்பட உள்ள இம்பிரியோ பிக்அப் டிரக்கின் முன்புற தோற்றம் முற்றிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இசுசூ டி – மேக்ஸ் மற்றும் டாடா ஸெனான் பிக்அப் டிரக்குகளுக்கு போட்டியாக அமையும்.

75ஹெச்பி ஆற்றலை வழங்கும் 2.5 லிட்டர் CRDe டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 220 என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

மிரட்டலான பிரிமியம் தோற்றத்தினை வழங்கும் நோக்கில் மிக நேர்த்தியான மஹிந்திரா பாரம்பரிய கிரில் அமையெற்றுள்ளது. மேலும் உட்புறத்திலும் சிறிய அளவிலான மாற்றங்களை கண்டுள்ளது.

சென்னை மஹிந்திரா ரிசர்ச் வேலியால் வடிவமைக்கப்பட்டுள்ள இம்பிரியோ பிக்அப் டிரக் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. சிறியரக வர்த்தக வாகன பிரிவில் மஹிந்திரா 53% பங்குகளை கொண்டுள்ளது. வரும் ஜனவரி 6, 2016 அன்று பிரிமியம் இம்பிரியோ பிக்அப் டிரக விற்பனைக்கு வருகின்றது.

imagecredis:lalukrishna.s facebook

Exit mobile version