Site icon Automobile Tamilan

மாருதி சுசூகி கார் விலை உயர்வு

இந்தியாவின் முன்னனி வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி கார் நிறுவனம் தனது அனைத்து மாடல்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. புதிதாக விற்பனைக்கு வந்த பலேனோ காரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

தனது அனைத்து மாடல்களின் விலையும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாக கொண்டு ரூ. 1000 முதல் ரூ.4000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மாருதி பலேனோ காரின் விலை ரூ. 5000 முதல் 12,000 வரை விலை உயர்த்தியுள்ளது.

மாருதி ஆல்டோ 800 கார் தொடங்கி மற்ற மாடல்களான ஆல்டோ கே10 , வேகன்ஆர் , செலிரியோ , ஸ்டிங்கரே , ரிட்ஸ் , ஸ்விஃப்ட் , டிசையர் , எர்டிகா , ஜிப்ஸி , ஆம்னி , இக்கோ , கிராண்ட் விட்டாரா , சியாஸ் மாடல்கள் ரூ.1000 முதல் 4000 வரை விலை உயர்வினை பெற்றுள்ளது.

நெக்ஸா வழியாக விற்பனை செய்யப்படும் பலேனோ பிரிமியம் ஹேட்ச்பேக் கார் விலை மட்டும் அதிகபட்சமாக ரூ. 5000 முதல் 12,000 வரை விலை உயர்ந்துள்ளது.

2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல கார் நிறுவனங்கள் விலை உயர்வினை அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக மாருதி சுசூகி கார் நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு கடந்த 16ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தொடர்புடையவை ; டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 ; மாருதி சுசூகி கார்கள்

மாருதி எஸ் க்ராஸ் விலை குறைப்பு

Exit mobile version