10வது பிறந்த நாளை கொண்டாடும் இன்னோவா

டொயோட்டா கார் நிறுவனத்தின் இன்னோவா எம்பிவி காரினை இந்தியாவில் அறிமுகம் செய்து 10 வருடங்களை கடந்துள்ளதால் சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பினை விற்பனைக்கு கொண்டு வந்த விலை உயர்த்தியுள்ளது.

இன்னோவா கார் விலை உயர்வு

டொயோட்டா இன்னோவா காரினை போல மிக சிறப்பான சொகுசு வசதி கொண்ட எம்பிவி காரை இந்திய சந்தையில் கண்டுபிடிப்பதே அரிதாக உள்ள நிலையில் இன்னோவா காரின் விலை மேலும் மேலும் உயர்ந்து வருகின்றது.

Toyota Innova

பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அனைத்து இன்னோவா மாடல்களிலும் காற்றுப்பைகளை நிரந்தரமாக்கியுள்ளனர். மேலும் புதிய கருப்பு கிரே என இரு வண்ண ஆலாய்வீல், மரவேலைப்பாடு மிக்க ஸ்டீயரியங், புதிய லெதர் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் வரி சலுகையை அரசு ரத்து செய்துள்ளதாலும் கூடுதலான விலை உயர்வினை பெற்றுள்ளது.

இன்னோவா வரையறுக்கபட்ட பதிப்பு

10 வது வருடத்தினை கொண்டாடும் வகையில் சிறப்பு எடிசனை அறிமுகம் செய்துள்ளது. சிறப்பு எடிசனில் உள்ள அம்சங்கள் தொடுதிரை ஆடியோ அமைப்பு, முகப்பு விளக்கு குரோம் பூச்சு, பின்புற விளக்குகளில் குரோம் பூச்சு, லிமிடெட் எடிசன் லேபிள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட ஜிஎக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும்.

டொயோட்டா இன்னோவா கார் விலை

புதுப்பிக்கப்பட்ட இன்னோவா விலை நிலவரப்படி ரூ10.51 லட்சம் முதல் 15.80 லட்சத்தினை தொடுகின்றது.
(ex-showroom delhi)

முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய இன்னோவா தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ளதால் புதிய இன்னோவா இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவரும்.
Exit mobile version