Automobile Tamilan

10 முதல் 20 லட்சம் விலையில் சுற்றுலா செல்ல ஏற்ற கார் எது ?

நெடுஞ்சாலை பயணம் மற்றும் சுற்றுலா செல்வதற்க்கு ஏற்ற கார் எது ? ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலையில் சிறப்பான கார் எது ? எந்த கார் வாங்கலாம்.
XUV500

ஆட்டோமொபைல் கேள்வி-பதில் ?…நண்பர் ராமசந்திரன் கேள்வி…

வணக்கம் நண்பரே ! இந்தியா முழுவதும் நெடுந்தூர சுற்றுலா பயணம் மேற்கொள்ள திட்டமிடுகிறேன் குடும்பத்துடன், (4 பேர்) எந்த காரை வாங்கலாம் 10 to 20 லட்சம் மதிப்பிற்குல்? அனைத்து சாதக பாதகங்களையும் கருத்தில் கொண்டு தயவுசெய்து பரிந்துரைக்கவும் . நன்றியுடன் Ram

நெடுஞ்சாலை பயணங்கள் மற்றும் சுற்றலா செல்ல ஏற்ற வகையில் காரினை வாங்க வேண்டுமெனில் அதிக லக்கேஜ் மற்றும் தாரளமான இடவசதியை பெற்றிருக்க வேண்டியது மிக அவசியமானதாகும்.

எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்களில் தாரளமான இடவசதி மற்றும் லக்கேஜ் எடுத்து செல்ல ஏற்றதாக அமையும்.



சுற்றுலா செல்ல ஏற்ற மூன்று கார்கள்…

1. டொயோட்டா இன்னோவா
2. ரெனோ லாட்ஜி
3. மஹிந்திரா XUV500

1. டொயோட்டா இன்னோவா

இன்னோவா மிக சிறப்பான கட்டுறுதிமிக்க தரமான பாகங்களுடன் பாதுகாப்பு அம்சங்களுக்கு குறைவில்லாத மாடலாக விளங்குகின்றது. டொயோட்டா இன்னோவா காரின் தரம்  மற்றும் சொகுசு தன்மை தாரளமான இடவசதி பல  வாடிக்கையாளர்கள் அறிந்த விசயமே ஆகும்.
100.6 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 200என்எம் . இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
சராசரியாக டொயோட்டா இன்னோவா காரின் மைலேஜ் நகரங்களில் லிட்டருக்கு 9கிமீ முதல் 10.50கிமீ வரையும் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 11கிமீ முதல் 13கிமீ வரை மைலேஜ் கிடைக்கும்.
ஓட்டுதல் மற்றும் கையாளுமை
ஓட்டுதல் மற்றும் வாகனத்தை எளிதாக கையாளும் வகையில் சிறப்பான திறனை வெளிப்படுத்தக்கூடிய மாடலாகும்.
உட்புறம்
7 மற்றும் 8 இருக்கைகள் என இரண்டு விதமான ஆபஷ்னில் இன்னோவா கிடைக்கின்றது. டாப் வேரியண்டில் தொடுதிரை ஆடியோ சிஸ்டம் பூளூடூத் தொடர்பு போன்றவை உள்ளது.
தோற்றம்
புதிய இன்னோவா அடுத்த வருட மத்தியில் வரவுள்ளதால் இன்னோவா காரின் தோற்றம் சற்று பழையதாகிவிட்டது எனலாம்.
மதிப்பீடு
எம்பிவி சந்தையில் அதிக விலை கொண்ட மாடலாக விளங்கும் எம்பிவி கார்களின் முடிசூடா மன்னாக விளங்குகின்றது.

2. ரெனோ லாட்ஜி

இன்னோவா காருக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ரெனோ லாட்ஜி சிறப்பான இடவசதி இன்னோவா காரை விட சற்று கூடுதலாக பெற்றிருந்தாலும் சந்தையில் இன்னோவா காரை வீழ்த்த முடியவில்லை
லாட்ஜி இரண்டு விதமான ஆப்ஷனில் கிடைக்கினறது. ஸ்டான்டர்டு லாட்ஜி மற்றும் பிரிமியம் அம்சங்களை கொண்ட ஸ்டெப்வே லாட்ஜி எடிசன்…நாம் ஸ்டெப்வே எடிசனை எடுத்துக்கொள்ளலாம்.
108.5 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 245என்எம் . இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
சராசரியாக ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே காரின் மைலேஜ் நகரங்களில் லிட்டருக்கு 13கிமீ முதல் 14.50கிமீ வரையும் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 16 கிமீ முதல் 17.50 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும்.
ஓட்டுதல் மற்றும் கையாளுமை
டஸ்ட்டர் காரில் உள்ள அதே என்ஜின் மற்றும் செயல்பாடுகளை பகிர்ந்துகொண்டுள்ள லாட்ஜி ஸ்டெப்வே சிறப்பாகவே உள்ளது.
உட்புறம்
7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷனில் ஸ்டெப்வே எடிசன் கிடைக்கின்றது. டாப் வேரியண்டில் தொடுதிரை அமைப்பு , செயற்க்கைகோள் நேவிகேஷன் , யூஎஸ்பி ஆக்ஸ் பூளூடூத் தொடர்பு போன்றவை பெற்று விளங்குகின்றது.
தோற்றம்
பின்புறம் பெரிதாக கவரவில்லை எனிலும் முகப்பிலும் பக்கவாட்டில் சிறப்பாகவே உள்ளது.
மதிப்பீடு
இன்னோவா காருக்கு மிக சவலாக வந்தாலும் சற்று குறைவான சேவை குறைப்பாட்டாலும் பெரிதாக இந்திய வாடிக்கையாளர்களை கவரவில்லை.

3. மஹிந்திரா எக்ஸ்யூவி500

யுட்டிலிட்டி ரக இந்திய சந்தையில் பெரும் பங்கினை வகிக்கும் இந்தியாவின் மஹிந்திராவின் உலக தர டிசைன் தாத்பரியங்களை கொண்ட மாடலாக இருக்கும் XUV500  எஸ்யூவி சந்தையில் சிறப்பான மாடலாக விளங்குகின்றது.
140 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 330என்எம் . இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனில் W10 மாடல் கிடைக்கின்றது.

சராசரியாக மஹிந்திரா XUV5OO காரின் மைலேஜ் நகரங்களில் லிட்டருக்கு 11கிமீ முதல் 13கிமீ வரையும் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 14 கிமீ முதல் 15.50 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும்.
ஓட்டுதல் மற்றும் கையாளுமை
ஓட்டுதல் மற்றும் கையாளுமையில் மற்ற இரண்டை விடவும் சற்று பின் தங்கியுள்ளது.
உட்புறம்
சொகுசு கார்களுக்கான இணையான பல நவீன அம்சங்களை பெற்று மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கூடுதல் வசதிகளை கொண்டுள்ளது. சன்ரூஃப் , நேவிகேஷன் , யூஎஸ்பி ஆக்ஸ் பூளூடூத் தொடர்பு போன்றவை பெற்று விளங்குகின்றது. பின்புற இரண்டு இருக்கை சிறுவர்களுக்கு ஏற்றதாகும்.
தோற்றம்
மற்ற இரண்டை விட சிறப்பான தோற்றத்தினை கொண்டு விளங்கும் எஸ்யூவி காராக XUV5OO விளங்குகின்றது.
மதிப்பீடு
சிறப்பான பிரிமியம் ரக எஸ்யூவி மாடலாக மஹிந்திராவின் சிறப்பான விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக விளங்குகின்றது. இளைய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

இன்னோவா கார் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மாடலாகும். அதனை தொடர்ந்து எக்ஸ்யூவி 500 பக்கவாட்டு காற்றுப்பைகளையும் கொண்டுள்ளது. லாட்ஜி காரிலும் காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் உள்ளது.
சிறப்பம்சங்கள்
மற்ற இரண்டை விட எக்ஸ்யூவி500 காரில் பல நவீன அம்சங்களை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து லாட்ஜி மற்றும் இன்னோவா உள்ளது.
விலை பட்டியல்

டொயோட்டா இன்னோவா

  • VX 8 Seat – ரூ.18.70 லட்சம்
  • VX 7 seat – ரூ.18.64 லட்சம்
  • ZX  – ரூ.19.46 லட்சம்

ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே

  • 110PS RXZ Stepway – ரூ.14.43 லட்சம்
  • 110PS RXZ 7STR Stepway – ரூ.14.79 லட்சம்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விலை

  • W4 – ரூ.13.89 லட்சம்
  • W6 – ரூ.15.32 லட்சம்
  • W8 – ரூ.17.41 லட்சம்
  • W8 (AWD) – ரூ.18.48 லட்சம்
  • W10 – ரூ. 18.52 லட்சம்
  • W10 (AWD) – ரூ.19.78 லட்சம்
இவை அனைத்தும் சென்னை ஆன்ரோடு விலை பட்டியல்

ஆட்டோமொபைல் தமிழன் தீர்ப்பு

நெடுஞ்சாலை பயணம் மற்றும் சுற்றலாவுக்கு ஏற்ற மாடலாக இன்னோவா மிக சிறப்பான மாடலாக அமைகின்றது. அதனை தொடர்ந்து எகஸ்யூவி 500 பல நவீன அம்சங்களுடன் விளங்குகின்றது. ரெனோ லாட்ஜி  குறைவான விலை கொண்ட மாடலாகும்.
Exit mobile version