Auto News

2013 டொயோட்டா எடியாஸ் மற்றும் லிவா அறிமுகம்

டொயோட்டா புதிய  மேம்படுத்தப்பட்ட எடியாஸ் மற்றும் எடியாஸ் லிவா கார்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நேற்று மும்பையில் நடந்த டொயோட்டா யூனிவர்சிட்டி கிரிக்கெட் சேம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அறிமுகம் செய்தனர்.

2010 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட எடியாஸ் செடான். அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் எடியாஸ் லிவா விற்பனைக்கு வந்தது. இதுவரை 1.45 இலட்சத்திற்க்கு அதிகமான வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.புதிய  மேம்படுத்தப்பட்ட எடியாஸ் மற்றும் எடியாஸ் லிவா கார்களில் வாடிக்கையாளர்கள் சொன்ன சில குறைகளை மட்டும் களைந்துள்ளது.

1.2 லிட்டர் எடியாஸ் லிவா டிஆர்டி ஸ்போர்ட்டிவ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட வசதிகள்

ரீடிசைன் க்ரீலுடன் குரோம் பூச்சு,புதிய டைல் விளக்குகள், இன்டிக்கேட்டர் ரியர் விய்வ், சீட் அட்ஜஸ்ட் பெல்ட் மற்றும் ஹெட் ரெஸ்ட், 2 டின் ஆடியோ இனைப்புடன் பூளுடூத் மற்றும் யூஸ்பி, புதிய ஏசி வென்ட்.

தற்பொழுது 220 டீலராக உள்ளதை 235 ஆக உயர்த்துள்ளது

விலை பட்டியல்

Share
Published by
MR.Durai
Tags: Toyota