Automobile Tamilan

2016ல் இந்தியா வந்த உலக சூப்பர்ஸ்டார்கள் – ஃப்ளாஷ்பேக்

அடுத்த சில மணி நேரங்களில் நிறைவுற உள்ள 2016 ஆம் ஆண்டின் இறுதி நிமிடங்களில் உள்ள நாம் இந்தாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நுழைந்துள்ள உலக பிரசத்தி பெற்ற சூப்பர்ஸ்டார் கார்களை பற்றி இந்த பகிர்வில் தெரிந்துகொள்ளலாம்.

 1. ஃபோர்டு மஸ்டாங்

50 ஆண்டுகால வராலற்றை கொண்டுள்ள ஃபோர்டு மஸ்டாங் சூப்பர் மஸில் ரக கார் முதன்முறையாக வலதுபக்க ஓட்டுதல் முறைக்கு மாறிய சில மாதங்களிலே இந்திய வாகன சந்தையில் நேரடியாக ஃபோர்டு களமிறக்கியுள்ளது. மஸில் ரக கார்களுக்கு உரித்தான அசத்தலான பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாக விளங்கும் மஸ்டாங் ரூ.65 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட்டிருக்கின்றது.

மஸ்டாங் ஜிடி வேரியண்டில் 401 hp ஆற்றல் மற்றும் 542என்எம் டார்க் வெளிப்படுத்தும் 5.8 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க – மஸ்டாங் மஸில் காரின் விபரங்கள்

2. நிசான் ஜிடி-ஆர்

உலக பிரபலங்களுக்கு எல்லாம் பிரபலமாக விளங்கும் காட்ஸில்லா கார் இந்தியாவில் ரூ.1.99 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  புதிய 3.8 லிட்டர் வி6 ட்வீன் டர்போ பெட்ரோல் எஞ்சின் 570 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 637 நியூட்டன் மீட்டர் ஆகும். பவரை நான்கு வீல்களுக்கும் எடுத்து செல்ல 6 வேக டியூவல் கிளட்ச் கியர்பாக்சினை பெற்றுள்ளது.

நிசான் ஜிடி-ஆர் கார் அதிகபட்சமாக மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறனை பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை மூன்று நொடிகளில் எட்டும் இயல்பினை கொண்டதாகும்.

இந்தியாவில் டெல்லியில் மட்டுமே நிசான் ஜிடி-ஆர் காரின் அதிகார்வப்பூர்வமான டீலரை திறக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – நிசான் ஜிடி ஆர் காரின் முழுவிபரம்

3. பென்ட்லீ பென்டைகா

உலகின் மிக வேகமான எஸ்யூவி மற்றும் விலை உயர்ந்த எஸ்யூவி மாடலாக விளங்கும் பென்ட்லீ பென்டைகா மாடல் இந்தியாவில் ரூ. 3.85 கோடி விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. 600 குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த W12 ட்வின் டர்போசார்ஜ்டு 6.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 900Nm ஆகும். இதில் 8 வேக ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 301கிமீ ஆகும். 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.1 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

இந்தியாவுக்கு 2016 ஆம் ஆண்டிற்கு வெறும் 20 கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 20 கார்களுமே விற்பனை ஆகிவிட்டது.

மேலும் படிக்க – பென்டைகா எஸ்யூவி விபரங்கள்

4. ஜீப் பிராண்டு

கடந்த சில ஆண்டுகளாகவே மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளான பிரசத்தி பெற்ற ஜீப் எஸ்யூவிகள் இந்திய சந்தையில் கிடைக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஜீப் எஸ்யூவிகளை மஹிந்திரா 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விற்பனைக்கு கொண்டு வந்திருந்தாலும் நேரடியான களத்தில் ஜீப் ரேங்கலர் , கிராண்ட் செரோக்கீ மாடல்கள் களமிறங்கியுள்ளது. மேலும் விரைவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவிலே தயாரிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க – இந்தியாவில் ஜீப் பிராண்டு அறிமுகம்

Exit mobile version