Site icon Automobile Tamil

2016ல் 1 லட்சம் கார்களை விற்பனை செய்ய ரெனால்ட் திட்டம்

ரெனால்ட் இந்தியா நிறுவனம் 2016-ல் 1 லட்சம் கார்களை விற்பனை செய்ய முயற்சியில் தீவரமாக செயல்பட்டு வருகின்றது. ரெனோ க்விட் காருக்கு கிடைத்த அமோக வரவேற்பினால் மிக இலகுவாக 1 லட்சம் கார்களை ரெனோ இந்தியா விற்பனை செய்ய உள்ளது.

கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ரெனோ நிறுவனம் மொத்தமாக 87,000 கார்களை விற்பனை செய்துள்ளது. மொத்த விற்பனையில் 65,000 கார்கள் க்விட் கார்களாகும். வருகின்ற டிசம்பர் இறுதிக்குள் ஒரு லட்சம் கார்கள் என்ற இலக்கினை தொடுவதன் வாயிலாக புதிய சாதனையை படைக்க உள்ளது.

வரும்காலத்தில் வருடத்திற்கு ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்ய  ரெனோ இந்தியா திட்டமிட்டுள்ளது. புதிய மாடல்கள் இந்தியர்களின் விருபத்திற்குஏற்ப மிக சிறப்பானதாகவும் , க்விட் வெற்றியை தொடரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தியாவினை ஏற்றுமதி மையமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சார்க் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நேபால் , இலங்கை , பூடான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.

இந்தியர்களின் மிக விருப்பமான காராக உள்ள ரெனோ க்விட் காரின் 1.0 லி இன்ஜின் மாடல் சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. மேலும் க்விட் ஏஎம்டி கியர்பாக்ஸ்மாடல் அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version