Automobile Tamilan

2016 டொயோட்டா இன்னோவா எம்பிவி கார் அறிமுகம் – Toyota Innova

2016 டொயோட்டா இன்னோவா எம்பிவி கார் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய டொயோட்டா இன்னோவா கார் முற்றிலும் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா கார்

இந்திய சந்தையில் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார் பல நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா தோற்றம்

முந்தைய தலைமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் சிறப்பான ஏரோடைனிக்ஸ் தோற்ற பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பயன்பாட்டு வாகனமாக இன்னோவா விளங்குகின்றது.
சரிவகமாக அமைந்துள்ள முகப்பு கிரில் பட்டையான இரு ஸ்லாட்களுக்கு மத்தியில் டொயோட்டா இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது. இரண்டு குரோம் ஸ்லாட்களை இணைப்பதனை போன்ற கூர்மையான புராஜெக்ட்ர் முகப்பு விளக்கில் பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது. பானெட் தோற்றம் சிறப்பாகவே அமைந்துள்ளது.
பக்கவாட்டில் டி பில்லர் புதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தோனேசியா வேரியயண்டில் லோ மாடலில் 16 இஞ்ச் அலாய் வீல் மற்றும் டாப் மாடல்களில் புதிய 17 இஞ்ச் அலாய் வீலை பெற்று விளங்குகின்றது.
பின்புற டெயில்கேட்டில் அகலமான டெயிர் விளக்குகள் பம்பர் வடிவம் போன்றவை மாற்றியைக்கப்பட்டுள்ளது.
புதிய இன்னோவா காரின் நீளம் 4735மிமீ அகலம் 1830மிமீ மற்றும் உயரம் 1795மிமீ ஆகும் . இது தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட 180மிமீ நீளம் , 60மிமீ உயரம் மற்றும் 45மிமீ அகலம் போன்றவை கூடுதலாகும். ஆனால் வீல்பேஸ் 2750மிமீ சமமாக உள்ளது.

இன்னோவா உட்புறம்

2016 இன்னோவா காரின் உட்புறத்தில் 7 மற்றும் 8 இருக்கை ஆப்ஷன்களே தொடர்கின்றது. பிரிமியம் தோற்றத்தினை வழங்கும் வகையில் தரமான உட்புற பொருட்களால் ஃபிட் மற்றும் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

 

ஃபேபரிக் அப்ஹோல்ஸ்ட்ரி , சிறப்பான இருக்கை உறை , கேபின் டிரே , ஆம்பியன்ட் லைட்டிங் போன்றவற்றுடன் சிறப்பான மரவேலைப்பாடு மிக்க டேஸ்போர்டு கூல்டு க்ளோவ் பாக்ஸ் , புதிய வடிவ ஸ்டீயரிங் வீல் , ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடு பொத்தான்கள் , ஸ்மார்ட் கீ , ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , பூளூடூத் , யூஎஸ்பி தொடர்பு போன்றவை உள்ளது.

 

 

8 இஞ்ச் அகலம் கொண்ட மிக நேர்த்தியான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல நவீன வசதிகள் உள்ளது. ஸ்மார்ட் போன் தொடர்பு , ஜெஸ்ச்சர் , குரல் வழி கட்டுப்பாடு , தானியங்கி கிளைமேட் கட்டுப்பாடு போன்றவை பெற்றுள்ளது,
என்ஜின்
இந்தோனேசியாவில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் புதிய 2.4 லிட்டர் ஜிடி டீசல் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. என்ஜினில் இகோ , நார்மல் மற்றும் பவர் என மூன்று விதமான மோட்களில் இயக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்திய சந்தையில் 147 ஹார்ஸ்பவர் மற்றும் 360என்எம் ஆற்றல் வழங்கும் 2.4 லிட்டர் ஜிடி டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு வசதிகள்

முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் ஏபிஎஸ் மற்றும் இபிடி நிரந்தர அம்சமாகவும் டாப் மாடலில் பக்கவாட்டு , முழங்கால் போன்றவைகளுக்கான காற்றுப்பைகளை பெற்றிருக்கும்.

விலை

இந்தியாவில் அடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள புதிய டொயோட்டா இன்னோவா காரின் விலை ரூ.13 லட்சத்தில் தொடங்கி ரூ. 21 லட்சத்தில் டாப் வேரியண்ட் விலை இருக்கும்.

 

Exit mobile version