Automobile Tamil

2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி விரைவில்

ஜிஎம் நிறுவனத்தின் செவர்லே இந்திய பிரிவு மேம்படுத்தப்பட்ட புதிய செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரை இறக்குமதி செய்துள்ளது. 2017 செவர்லே ட்ரெயில்பிளேசர்  சிறிய அளவிலான தோற்ற மாற்றங்களை அதிகமாக பெற்றுள்ளது.

2017-Chevrolet-Trailblazer

முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய வர்த்தக மதிப்பினை வெகுவாக இழந்து வந்த நிலையில் தன்னுடைய அனைத்து மாடல்களையும் புதுப்பிக்கும் நோக்கில் முதலீட்டினை மேற்கொண்டு வருகின்றது. அதன் தொடக்கமாக செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரினை அறிமுகம் செய்துள்ளது.

சர்வதேச அளவில் கடந்த மாதம் ட்ரெயில்பிளேசர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  புதிய ட்ரெயில்பிளேசர் காரின் முகப்பு தோற்றம் செவர்லே கொலர்டோ பிக்அப் டிரக்கின் சாயில் மிகவும் ஸ்போர்ட்டிவாக அமைந்துள்ளது. புதிய முகப்பு விளக்கு , பம்பர்  போன்றவை இணைக்கப்பட்டு பக்கவாட்டில் பெரிதான மாற்றங்கள் இல்லை. பின்புற தோற்றத்தில் டெயில் விளக்கு  பம்பரில் சிறிய மாற்றங்களை பெற்றுள்ளது.

உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டில் புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , புதிய 8 இன்ச் மைலிங்க் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே தொடர்பினை பெறலாம்.

200 HP ஆற்றலுடன் 500 Nm இழுவைதிறனை பெற்றுள்ளள 2.8 லிட்டர் டியூரோமேக்ஸ் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

தாய்லாந்து சந்தையில் உள்ள 2017 செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யூவி காரின் LTZ டாப் வேரியண்ட் மாடலே ஹோமோலோகேஷன் தேவைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் மேம்படுத்தப்பட்ட ட்ரெயில்பிளேசர் அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது. முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் ட்ரெயில்பிளேசர் போட்டியாளர்கள் ஃபார்ச்சூனர் , எண்டேவர் , சான்டா ஃபீ ,ரெக்ஸ்டான் , பஜெரோ ஸ்போர்ட் இசுசூ எம்யூ 7 போன்ற எஸ்யுவிகளாகும்.

Exit mobile version