2017 மாருதி சியாஸ் கார் வேரியன்ட் மற்றும் விபரம்

வரவுள்ள மேம்படுத்தப்பட்ட 2017 மாருதி சுசுகி சியாஸ் கார் மாடலின் வேரியன்ட் விபரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மாருதி சியாஸ் பிரிமியம் நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

2017 மாருதி சியாஸ்

சமீபத்தில் 2000 டீலர்கள் எண்ணிக்கை நாடு முழுவதும் மாருதி பெற்றுள்ள நிலையில் 200 க்கு மேற்பட்ட நெக்ஸா டீலர்களையும் மாருதி சுசூகி பெற்றுள்ளது. நெக்ஸா டீலர்கள் வழியாக எஸ் க்ராஸ் , பலேனோ மற்றும் இக்னிஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கார்களில் இடம்பெற்றுள்ளதை போன்ற சிக்மா ,ஆல்ஃபா , டெல்டா மற்றும் ஜெட்டா போன்ற வேரியன்ட் பெயர்களை புதிய சியாஸ் கார் பெற்றுள்ளதை உறுதி செய்யும் வகையிலான தகவல்கள் வெளியாகியுள்ளது.

variant image source –  team-bhp.com

சியாஸ் காரில் 1.3 லிட்டர் டர்போ டீசல் DDiS 200 என்ஜின் மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனாக எஸ்ஹெச்விஎஸ் ஆப்ஷனை பெற்றதாக விளங்கும். மேலும் சியாஸ் பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இரு மாடல்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் கூடுதலாக பெட்ரோல் வேரியன்டில் மட்டுமே 4 வேக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சிக்மா ,ஆல்ஃபா , டெல்டா மற்றும் ஜெட்டா போன்ற மாடல்களை பெற்றுள்ள புதிய சியாஸ் காரில் கூடுதலாக S  வேரியன்ட் மாடலும் டீசல் என்ஜினில் பெற்றுள்ளது. இந்த மாடலானது கூடுதல் வசதிகளை பெற்ற சியாஸ் ஆர்எஸ் போன்றே அமைந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளது.

அடுத்த சில மாதங்களுக்குள் மாருதி பிரிமியம் டீலர்களான நெக்ஸா ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்கலாமே..! சியாஸ் கார் மற்றும் மாருதி சுசுகி கார் செய்திகள் ..!

Exit mobile version