2017 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் கார் படங்கள் வெளியானது

2017 மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி மிகுந்த எதிர்பார்பினை ஏற்ப்படுத்தியுள்ளது. முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்  கார் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள மாருதி ஸ்விப்ட் காரின் புதிய தலைமுறை மாடலின் முன்புறத்தினை விட பக்கவாட்டின் பின்புறத்தில் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சம் பரவலாக அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆடி காரின் பாரம்பரிய கிரிலை போன்றே எண்கோண வடிவில் கிரில் அமைந்துள்ளது. அதன் மத்தியில் சுஸூகி  லோகோ பதிக்கப்பட்டுள்ளது. புராஜெக்டர் முகப்பு விளக்குளுடன் , பகல் நேர எல்இடி  ரன்னிங் விளக்கினை பெற்றிருக்கும். மேலும் பனி விளக்குகள் அகலமான ஏர் டேம் மற்றும் நேர்த்தியான பானெட் போன்றவற்றை கொண்டுள்ளது.

பக்கவாட்டில் சிறப்பான ஸ்விஃப்ட் காரின் சரிவான மேற்கூறை , பின்புற கதவின் கைப்பிடிகள் சி பில்லர் இறுதியில் கருப்பு பூச்சூ மத்தியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தோற்ற அமைப்பு மிகவும் ஸ்போர்ட்டிவாகவும் இளம் வாடிக்கையாளர்களை விரைவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.

பின்புறத்திலும் மிகவும் ஸ்டைலிஸான தோற்றத்துடன் எல்இடி டெயில் விளக்குகளை பெற்றிருக்கலாம். மேலும் ஸ்போர்ட்டிவ் மாடலில்  பாடி கிளாடிங் , கருப்பு பம்பர் போன்றவற்றை பெற்றிருக்கும்.

புதுப்பிக்கப்பட்ட புதிய டேஸ்போர்டில் இரட்டை பிரிவு இன்ஸ்ரூருமெண்ட் கிளஸ்ட்டர் , அகலமான சென்ட்ரல் கன்சோலில் தொடுதிரை அமைப்புடன் கூடிய ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் ஆப்ஷனை பெற்றிருக்கும்.

1.0 லிட்டர் டர்போபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வரலாம். 2017 ஆம் ஆண்டின்  தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

[envira-gallery id="7101"]

Exit mobile version