2017 முதல் செவர்லே கார்கள் விலை உயர்கின்றது

இந்தியாவில் ஜிஎம் நிறுவனத்தின் அங்கமான செவர்லே கார்கள் விலை 1 சதவீதம் முதல் 3சதவீத விலை உயர்வினை சந்திக்க உள்ளது. இந்த விலை உயர்வில் செவர்லே கார் மாடல்கள் அனைத்துக்கும் பொருந்தும்.

பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாகனங்களின் விலையை கணிசமாக உயர்த்தி உள்ளநிலையில் செவர்லே நிறுவனம் தங்களுடைய கார் மாடல்களின் விலையை அதிகபட்சமாக 30,000 வரை உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து செவர்லே இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் பண பரிமாற்றம் விகிதத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் கடுமையாக அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை போன்ற காரணங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செவர்லே நிறுவனம் பீட் , க்ரூஸ் ,ஸ்பார்க் , தவேரா , செயில் , செயில் ஹேட்ச்பேக்  மற்றும் ட்ரெயில்பிளேசர் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

வருகின்ற 2017 ஆம் ஆண்டில் 4 புதிய மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.அவை புதிய செவர்லே பீட் ,பீட் ஏக்டிவ் க்ராஸ் ஓவர் , 2017 ட்ரெயில்பிளேசர் மற்றும் எசென்சியா செடான் போன்ற மாடல்கள் வரவுள்ளது.

Exit mobile version