Automobile Tamil

2017 ஹோண்டா மொபிலியோ கார் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார் பல்வேறு வசதிகள் மற்றும் தோற்ற மாற்றங்களை பெற்ற மாடல் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய மொபிலியோ வருகை விபரம் வெளியாகவில்லை.

இந்தியாவில் விற்பனைக்கு வந்த நாள் முதல் எந்த மாற்றங்களும் இல்லாமல் மொபிலியோ விற்பனை செய்யப்பட்டு வருவதனால் புதிய மாடல் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாக புதிய ஹோண்டா சிட்டி மற்றும் டபிள்யூஆர்-வி க்ராஸ்ஓவர் மாடல்கள் சந்தைக்கு வரவுள்ளது.

2017 ஹோண்டா மொபிலியோ

என்ஜின் மற்றும் பவர் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லாமல் முன்பக்க தோற்ற அமைப்பில் புதிய டிசைன் மேம்பாடுகளுடன் பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் ,  மேம்படுத்தப்பட்ட ஹெட்லேம்ப்  புதுப்பிக்கப்பட்ட பம்பர் , பனி விளக்குகள் போன்றவற்றை பெற்றுள்ளது.  பக்கவாட்டில் புதிய 15 அங்குல அலாய் வீல் , பின்புற பம்பரில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்று விளங்குகின்றது.

புதிய மொபிலியோ இன்டிரியரில் மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டு அமைப்பில் 6.8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்  போன்றவற்றை பெற்றுள்ளது.பாதுகாப்பு அம்சங்களான முன்பக்க இரட்டை காற்றுப்பைகள்  , ஏபிஎஸ் , இபிடி , 3 புள்ளி இருக்கை பட்டைகள் , ஐஎஸ்ஓஃபிக்ஸ் மவுன்டேட் , வெகிள் ஸ்டெபிலிட்டி , ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் போன்றவை இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் புதிய ஹோண்டா பொபிலியோ விற்பனைக்கு வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version