Automobile Tamilan

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 வருகை விபரம்..!

இந்தியாவின் யுட்டிலிட்டி ரக வாகன தயாரிப்பாளரின் முன்னணி நிறுவனமான மஹித்திரா நிறுவனத்தின்  எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடலின் மேம்படுத்தப்பட்ட கார் கூடுதலான பவர் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டதாக விற்பனைக்கு வரவுள்ளது.

2017 மஹிந்திரா எக்ஸ்யூவி500

புதிய இனோவா க்ரிஸ்டா மற்றும் டாடா ஹெக்ஸா போன்ற மாடல்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் சவாலான மாடலாக விளங்கி வருகின்ற எக்ஸ்யூவி500 காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் கடந்த 2015 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது வரவுள்ள புதிய மேம்படுத்தப்பட்ட மாடலில் விற்பனையில் உள்ளதை விட கூடுதலாக 20 ஹெச்பி வரை பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 140 ஹெச்பி பவரை வெளிப்படுத்துகின்ற 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 330 என்எம் டார்க் வரை வெளிப்படுத்துகின்றது. இதன் ஆற்றல் 20 ஹெச்பிக்கு மேல் அதிகரிக்கப்பட்டு 160 ஹெச்பி எட்டலாம் அல்லது அதற்கு மேல் கூடுதலாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தோற்ற அமைப்பில் முன்பக்க கிரில் மற்றும் ஹெட்லைட் போன்றவற்றுடன் பனிவிளக்கு அறையில் சிறிய மாற்றங்களை பெற்றிருக்கும். பின்புற அமைப்பில் டெயில்விளக்கில் சிறிய மாற்றங்கள் மற்றும் பம்பரில் சிறிய மாற்றங்கள் பெற்றிருக்கும்.

இன்டிரியர் அமைப்பில் சிறிய அளவிலான மேம்பாடுகளுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கூடுதல் வசதிகள் மற்றும் இருக்கை அமைப்பு, அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவற்றில் சிறிய மாற்றங்களை பெற்றிருக்கும்.

வருகின்ற பண்டிகை காலத்துக்கு முன்னதாக வரவுள்ள 2017 மஹிந்திரா எக்ஸ்யூவி எஸ்யூவி மாடல்  இனோவா க்ரிஸ்டா, ஹூண்டாய் டூஸான், டாடா ஹெக்ஸா மற்றும் வரவுள்ள ஜீப் காம்பஸ் போன்றவற்றுக்கு ஈடுகொடுக்கும்வகையில் அமையலாம்.

Exit mobile version