Automobile Tamilan

2018ல் ஹூண்டாய் சான்ட்ரோ கார் வருகை

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற சான்ட்ரோ கார் ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த முதல் காராகும். 16 ஆண்டுகளுக்கு மேலாக ஹூண்டாய் நிறுவனத்துக்கு வலுசேர்த்து வந்த சான்ட்ரோ கார் 2014யில் விடைபெற்றது. மீண்டும் ஹூண்டாய் சான்ட்ரோ 2018 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

hyundai-santro

 

13.6 லட்சம் சான்ட்ரோ கார்கள் இந்திய சந்தையிலும் 5.35 லட்சம் கார்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்திய சந்தையில் கார்புரேட்டருக்குமாற்றாக மல்டி ஃபூயூவல் இன்ஜெக்ஷன் பொருத்தப்பட்ட ஹூண்டாய் சான்ட்ரோ கார் இந்திய சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பாளராக உருவாக முக்கிய காரணம் ஆன சான்ட்ரோ கார் புதிய மாடல்களான கிராண்ட் ஐ10 , எலைட் ஐ20 போன்ற கார்கள் வரவால் சான்ட்ரோ விற்பனை சரியவே ஓரங்கட்டப்பட்டது.

மீண்டும் சான்ட்ரோ காரினை நவீன தலைமுறைக்கு ஏற்றவாறு மேம்படுத்தி பல நவீன வசதிகளுடன் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மாடலாக போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் வகையில் விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் 2018 ஆம் ஆண்டில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. சான்ட்ரோ விற்பனைக்கு வரும்பொழுது தற்பொழுது  விற்பனையில் உள்ள ஐ10 காரினை விலக்கி கொள்ள ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

சான்ட்ரோ பிராண்டின் பெயரிலே விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. சந்தையில் உள்ள க்விட் ,ரெடி-கோ போன்ற கார்களுக்கும் சவாலாக புதிய மாடல் அமையும்.

[youtube https://www.youtube.com/watch?v=y6Q_nf3KMI4]

Exit mobile version