Automobile Tamilan

2018 முதல் மஹிந்திரா கார்களில் பெட்ரோல் எஞ்ஜின்

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களிலும் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களை 2018 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. தற்பொழுது கேயுவி100 காரில் மட்டுமே பெட்ரோல் எஞ்ஜின் மாடல் விற்பனையில் உள்ளது.

mahindra-xuv500

டீசல் கார் மீதான மோகம் சரிந்து வரும் நிலையில் மஹிந்திரா , டொயோட்டா மற்றும் டாடா போன்ற நிறுவனங்கள் பெட்ரோல் இஞ்ஜின் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டு வருகின்றது. கடந்த 9 மாதங்களாக தொடர்ந்த டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில்  டீசல் கார்களுக்கு தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏப்ரல்-ஜூன் 2017 வரையிலான காலகட்டத்தில் 41 சதவீத சந்தை மதிப்பாக டீசல் கார்கள் குறைந்தது.இதே காலகட்டத்தில் முந்தைய வருடத்தின் டீசல் கார் சந்தை மதிப்பு 45 சதவீதமாகும்.  பெட்ரோல் கார்கள் விற்பனை 59 சதவீதமாக உள்ளது. முந்தைய வருடத்தில் 56 சதவீதத்தை பெற்றிருந்தது.

டீசல் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து 1.99 லிட்டர் எஞ்ஜின் மாடலாக 2.2லிட்டர் எம்ஹாக் எஞ்ஜினை மாற்றி ஸ்கார்ப்பியோ , எக்ஸ்யூவி500 கார்களை மஹிந்திரா வெளியிட்டது. கேயூவி 100 காரின் மொத்த விற்பனையில் 50 சதவீத பங்கினை பெட்ரோல் மாடல்களை பெற்றுள்ளதாக மஹிந்திரா நிர்வாக இயக்குனர் பவன் குன்கா தெரிவித்துள்ளார்.

1.2 லிட்டர் ,1.5 லிட்டர் மற்றும் 2.0  லிட்டர் ஆகிய மூன்று பிரிவுகளில் பெட்ரோல் எஞ்ஜின்களை மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. 1.2 லிட்டர் கேயூவி100 காரில் இடம்பெற்றுள்ளதால் தயாரிப்பு நிலை 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் நூவோஸ்போர்ட் ,டியூவி300 போன்ற மாடல்களில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.

தகவல் உதவி ; autocarindia

 

Exit mobile version