Automobile Tamilan

2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் டீசர் வெளியானது

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஹேட்ச்பேக் கார்களில் முதன்மையாக விளங்கும் மாருதியின் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் உட்பட இன்டிரியரில் சிறிய மேம்பாடுகளை பெற்றிருக்கும்.

கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைத்து வருகின்ற மாடலின் அடிப்படையிலான காரை இந்திய சந்தைக்கு கொண்டு வர மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது.

2021 மாருதி ஸ்விஃப்ட்

புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12B அதிகபட்சமாக 90 hp பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ்களில் கிடைக்கின்றது. கூடுதலாக இந்த இன்ஜின் இப்போது 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதால் கூடுதலான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தோற்ற அமைப்பில் முன்புற கிரில் தேன்கூடு தோற்ற அமைப்புடன் மத்தியில் க்ரோம் ஃபினீஷ் செய்யப்பட்ட ஸ்லாட் வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட பனி விளக்கு, புதிய ஹெட்லேம்ப் ஆகியவற்றை கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. பக்கவாட்டில் புதிய வடிவத்திலான அலாய் வீல், பின்புறத்தில் சிறிய அளவிலான பம்பர் மாற்றங்களை கொண்டிருக்கும்.

இன்டிரியர் அமைப்பில் சிறிய அளவில் மட்டும் ஸ்டைலிங் அம்சங்களை பெற்றிருக்கும். மற்றபடி, தொடர்ந்து 4.2 அங்குல கிளஸ்ட்டர், 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை கொண்டிருக்கின்றது.

விற்பனையில் கிடைத்து வருகின்ற மாடலை விட 2021 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் விலை சற்று கூடுதலாக துவங்கலாம். மார்ச் 6 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version