1.3 டன் முதல் 2.0 டன் வரை சுமை தாங்கும் திறன் பெற்ற 2023 மஹிந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்-அப் (Bolero Maxx Pikup) டிரக்கில் டீசல் மற்றும் சிஎன்ஜின் ஆப்ஷன் பெற்று ₹ 7.85 லட்சம் முதல் ₹ 10.33 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவிற்கான குறைந்தபட்ச டவுன் பேமெண்ட் ரூ 24,999 ஆக துவங்கப்பட்டுள்ள புதிய பொலிரோ மேக்ஸ் பிக்ப்பில் HD சீரிஸ் மற்றும் சிட்டி சீரிஸ் என இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது.
HD வேரியண்டில் 2.0L, 1.7L, 1.7 மற்றும் 1.3 ஆகிய நான்கு வகைகளில் வழங்கப்படுகிறது, சிட்டி தொடர் 1.3, 1.4, 1.5 மற்றும் City CNG வகைகளில் கிடைக்கிறது. 2023 பொலிரோ பிக்கப் சிட்டி மாடல் விலை ரூ. 7.85 லட்சம் முதல் ரூ. 8.25 லட்சம் வரையிலும், HD வகை (ஹெவி டியூட்டி) விலை ரூ.9.26 லட்சம் முதல் ரூ.10.33 லட்சம் வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொலிரோ மேக்ஸ் பிக்-அப் ஆனது சிஎன்ஜி மற்றும் டீசல் என இரண்டு வகையிலும் m2Di என்ஜின் பெற்று சின்ஜி வகையில் 52.2 kW (71 PS) / 200 Nm மற்றும் டீசல் வகையில் 59.7 kW (81 PS) / 220 Nm பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும். உதன் மைலேஜ் லிட்டருக்கு 17.2 கிமீ வழங்குகிறது.
HD 1.7L மாடலின் கார்கோ 3050mm நீளம் மற்றும் 1.3 டன் கார்கோ நீளம் 2765mm ஆகும். அடுத்து, பிக்-அப் சிட்டிக்கு 1.5டன் மற்றும் 1.4 டன் மாடலுக்கு கார்கோ நீளம் 2640 மிமீ ஆகும். பிக்-அப் சிட்டி1.3 டன் மாடலுக்கு கார்கோ நீளம் 2500 மிமீ ஆக உள்ளது.
இந்த டிரக்கில் இணைக்கப்பட்டுள்ள iMAXX டெலிமேட்டிக்ஸ் மூலம் 50 க்கும் மேற்பட்ட அம்சங்களை வழங்குகின்றன. இவற்றை மொபைல் ஆப் மூலம் அணுகலாம். ஆங்கிலம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி ஆகிய மொத்தம் 6 இந்திய மொழிகளில் வழங்கப்படுகின்றன. இந்த நுட்பத்தின் மூலமாக வாகன கண்காணிப்பு, வழி திட்டமிடல், செலவு மேலாண்மை, ஜியோ ஃபென்சிங், வாகன பராமரிப்பு போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…
View Comments
Monesh