39,315 கார்களை திரும்ப அழைக்கும் ஃபோர்டு இந்தியா..!

2004 முதல் 2012 வரை தயாரிக்கப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தின் ஃபியஸ்டா கிளாசிக் மற்றும் முதல் தலைமுறை ஃபிகோ ஆகிய இரு மாடல்களிலும் பவர் அசிஸ்டேட் ஸ்டீயரிங் குழாயில் உள்ள பிரச்சனைக்காக 39,315 கார்களை திரும்ப அழைக்க உள்ளது.

ஃபோர்டு இந்தியா

இந்தியாவில் ஃபோர்ட் நிறுவனத்தின் ஃபோர்டு ஃபியஸ்டா கிளாசிக்  மற்றும் முதல் தலைமுறை ஃபிகோ என இரு மாடல்களிலும் அதிக அழுத்தம் கொண்ட பவர் அசிஸ்டேட் ஸ்டீயரிங் குழாயில் விரிசலின் காரணமாக ஆயில் வெளியேறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பவர் ஸ்டீயரிங் ஆயில் எஞ்சின் அறையில் ஆயில் வெளியேறுவதனால், எக்ஸ்ஹாஸ்ட் பகுதியை ஆயில் வந்தடைவதனால் புகை போக்கி வாயிலாக கலப்பதனால் அதிக புகை வெளிவரும் அல்லது அரிதாக  தீப்பற்றும் அபாயம் உள்ளதால் தானாகேவே முன்வந்து கார்களை திரும்ப அழைப்பதாக ஃபோர்டு தெரிவித்துள்ளது.

தானாகவே முன்வந்து ஃபோர்டு தங்களுடைய பாதிக்கப்பட்ட கார்களில் ஆய்வு செய்து டீலர்கள் வாயிலாக இலவசமாக மாற்றி தருவதாக அழைப்பு விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்களுக்கு டீலர்கள் விரைவில் தொடர்பு கொள்வார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version