Automobile Tamilan

ஆகஸ்ட் 15-ல் 7 ஓஜா டிராக்டர்களை வெளியிடும் மஹிந்திரா

mahindra oja teaser

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தென் ஆப்பிரிக்கா கேப் டவுனில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் ஒஜா பிராண்டில் 7 டிராக்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனம் மஹிந்திரா தார்.இ , மஹிந்திரா பிக்கப் என இரு மாடல்களை உறுதி செய்திருந்த நிலையில் மூன்றாவது டீசரை வெளியிட்டுள்ளது.

இலகுரக டிராக்டர் மாடல்களாக வரவிருக்கும் ஓஜா இந்தியா மட்டும்மலாமல் பல்வேறு சர்வதேச சந்தையில் விற்பனைக்கு செல்ல உள்ளது. உலகின் மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பாளராக மஹிந்திரா விளங்குகின்றது.

 Mahindra Oja Tractors

20 ஹெச்பி முதல் 70 ஹெச்பி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேலும் இந்த ஆண்டு முதல் அடுத்த மூன்று நிதியாண்டுகளில் வெளியிடப்படும். ஒவ்வொரு மஹிந்திரா ஓஜா டிராக்டரும் நிறுவனத்தின் “ முதல் தரமான தொழில்நுட்ப அம்சங்களை” கொண்டிருக்கும்.

ஓஜா சப்-காம்பாக்ட் 20-25hp, காம்பாக்ட் (21-30hp), சிறிய பயன்பாடு (26-40hp) மற்றும் பெரிய பயன்பாடு (45-70hp) ஆகியவற்றில் 7 டிராக்டர் வெளியிடப்பட உள்ளது.

4 பிரிவுகளில் 40 மாடல்களுடன் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 4 சந்தைகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, பிரேத்தியேகமாக மிட்சுபிஷி மஹிந்திரா அக்ரிகல்ச்சர் மெஷினரி, ஜப்பான் மற்றும் சென்னையில் உள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தின் பொறியியல் குழு, மஹிந்திராவின் ஆட்டோ மற்றும் பண்ணை துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள மஹிந்திரா டிராக்டர் ஜஹீராபாத் ஆலையில் 1,087 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இரண்டு ஷிப்ட் முறையில் ஆண்டுக்கு 100,000 டிராக்டர்களுக்கு மேல் தயாரிக்கும் திறனை கொண்டுள்ளது.

Exit mobile version