டிரைவிங் செய்யும்பொழுது கால் வராது..! – ஆப்பிள் ஐஓஎஸ் 11

டிரைவிங் செய்யும்பொழுது அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை ஏற்பதனாலே பெரும்பாலான விபத்துகள் ஏற்படுவதனை தடுக்கும் வகையில் ஆப்பிள் தன்னுடைய புதிய ஐஓஎஸ் 11 தளத்தில் டூ நாட் டிஸ்டர்ப் வைல் டிரைவிங் என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது.

டூ நாட் டிஸ்டர்ப் வைல் டிரைவிங்

ஐஓஎஸ் 11  இயங்குதளத்தில் Do Not Disturb While Driving (DNDWD) என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள இந்த வசதியின் வாயிலாக ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளர்கள் தங்களுடைய ஸ்மார்ட் கருவிகளின் வாயிலாக கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆப்பிள் கார் ப்ளே வாயிலாக பயன்படுத்தினால் வாகனத்தின் நகருதலை உணர்ந்து செயல்படும் வகையிலான DNDWD அழைப்புகள் மற்றும் மெசேஜ் போன்றவற்றை முற்றிலுமாக நிராகரிக்க வழி வகுக்கின்றது.

வை-ஃபை , புளூடுத் போன்றவற்றின் இணைப்பை பயன்படுத்தினாலே கார் நகருவதனை உணர்ந்தால் உடனடியாக DNDWD மோடினை இயக்குவதற்கான அனுமதியை தானாகவே பெற்று செயல்படும் வகையிலோ அல்லது பயனாளர் விருப்பத்தின் அடிப்படையில் ஐஓஎஸ் 11  தளம் செயல்படும்.

எனவே கார் ப்ளே வசதி வாயிலாக இணைக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியம் என்பது கட்டாயமில்லை. இதுபோன்ற அமைப்பினை ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் இயங்குதளத்துடன் அடிப்படையாகவே வழங்கினால் மொபைல் வாயிலாக ஏற்படும் விபத்தினை பெருமளவு குறைக்க வழிவகுக்கும்.

Exit mobile version