அசோக் லேலண்ட் & ஹினோ மோட்டார்ஸ் கூட்டணி : BSVI எஞ்சின்

வருகின்ற ஏப்ரல் 2020 முதல் பிஎஸ்-6 மாசு விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதை தொடர்ந்து BSVI தர எஞ்சினை தயாரிக்கும் நோக்கில் அசோக் லேலண்ட் மற்றும் ஹினோ மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.

அசோக் லேலண்ட் எஞ்சின்

1986 ஆம் ஆண்டு முதல் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டொயோட்டா மோட்டார்சின் ஹினோ நிறுவனமும் அசோக் லேலண்ட் நிறுவனமும் இணைந்து எஞ்சின் தொடர்பான மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக எதிர்காலத்ததில் நடைமுறைக்கு வரவுள்ள அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப பிஎஸ் 6 அல்லது யூரோ 6 எஞ்சினை தயாரிப்பதற்கு என இரு நிறுவனங்களும் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக ஹினோ நிறுவனத்தின் எஞ்சின் தொடர்பான நுட்பங்களை அசோக் லேலண்ட் பிஎஸ்-6 எஞ்சின்களை தயாரிக்க பயன்படுத்திக் கொள்ள, ஹினோ எஞ்சின் பாகங்களை உருவாக்குவதனுடன் இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ வினோத் கே. தசாரி கூறுகையில், நீண்ட கால செயல்பாட்டுக்கு எற்றதாக ஒப்பந்தம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம், மேலும் ஹினோ மோட்டார்ஸ் மிகுந்த நம்பகத்தன்மை கொண்ட நிறுவனமாக விளங்குகின்றது. எங்கள் நிறுவனங்களுக்கு இடையிலான இந்த ஒத்துழைப்பு பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் உலகளாவிய போட்டித்திறன் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய எங்களுக்கு உதவிகரமானதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version