டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் அப்பாச்சி 160, அப்பாச்சி 200 பைக்குகளை தொடர்ந்து ஜூபிடர் கிளாசிக் மாடலில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜினை பெற்று விற்பனைக்கு வெளியாகியுள்ளது. சாதாரண ஜூபிடர், ZX மற்றும் கிராண்டே மாடல்களில் விரைவில் பிஎஸ் 6 என்ஜின் இணைக்கப்பட உள்ளது. பைக் தயாரிப்பாளர் புதிய பிஎஸ் 6 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க என்ஜினை புதுப்பிக்க ET-Fi (Ecothrust Fuel injection) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.
முந்தைய மாடலை விட ரூ.8,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ள பிஎஸ்6 என்ஜினை பெற்ற ஜூபிடரின் பவர் மற்றும் டார்க் விபரங்களை குறிப்பிடவில்லை. முந்தைய பிஎஸ்4 மாடல் 7.88 BHP மற்றும் 8.4 Nm டார்க் வெளிப்படுத்தியது. எனவே பவரில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.
பிஎஸ்6 என்ஜினை பெற்ற டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் மாடலில் புதிய இன்டிப்ளூ நிறத்துடன் சன்லைட் ஐவரி மற்றும் பிரவுன் என மூன்று நிறங்களில் கிடைக்கும்.
டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் விலை ரூ. 67,911 (டெல்லி எக்ஸ்ஷோரூம்)
சமீபத்தில் இந்நிறுவனம் தனது அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடல்கள் RT-Fi அல்லது Race Tuned Fuel Injection முறையை பெற்று பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…