Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் கிளாசிக் மாடலில் பிஎஸ் 6 வெளியானது

by automobiletamilan
November 29, 2019
in பைக் செய்திகள்

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் அப்பாச்சி 160, அப்பாச்சி 200 பைக்குகளை தொடர்ந்து ஜூபிடர் கிளாசிக் மாடலில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜினை பெற்று விற்பனைக்கு வெளியாகியுள்ளது. சாதாரண ஜூபிடர், ZX மற்றும் கிராண்டே மாடல்களில் விரைவில் பிஎஸ் 6 என்ஜின் இணைக்கப்பட உள்ளது. பைக் தயாரிப்பாளர் புதிய பிஎஸ் 6 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க என்ஜினை புதுப்பிக்க ET-Fi (Ecothrust Fuel injection) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.

முந்தைய மாடலை விட ரூ.8,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ள பிஎஸ்6 என்ஜினை பெற்ற ஜூபிடரின் பவர் மற்றும் டார்க் விபரங்களை குறிப்பிடவில்லை. முந்தைய பிஎஸ்4 மாடல் 7.88 BHP மற்றும் 8.4 Nm டார்க் வெளிப்படுத்தியது. எனவே பவரில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.

பிஎஸ்6 என்ஜினை பெற்ற டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் மாடலில் புதிய இன்டிப்ளூ நிறத்துடன் சன்லைட் ஐவரி மற்றும் பிரவுன் என மூன்று நிறங்களில் கிடைக்கும்.

டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் விலை ரூ. 67,911 (டெல்லி எக்ஸ்ஷோரூம்)

சமீபத்தில் இந்நிறுவனம் தனது அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடல்கள் RT-Fi அல்லது Race Tuned Fuel Injection முறையை பெற்று பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது.

Tags: TVS Jupiterடிவிஎஸ் ஜூபிடர்
Previous Post

ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பில் உள்ளது

Next Post

விரைவில்.., அல்ட்ரோஸ் காருக்கு முன்பதிவை துவங்கும் டாடா மோட்டார்ஸ்

Next Post

விரைவில்.., அல்ட்ரோஸ் காருக்கு முன்பதிவை துவங்கும் டாடா மோட்டார்ஸ்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version