Site icon Automobile Tamilan

அறிவிக்கப்பட்டது ராயல் என்பீல்ட் 650 டூவின் சர்வதேச வெளியீட்டு தேதி

ராயல் என்பீல்ட் நிறுவங்கள் இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 பைக்குகளை வரும் செப்டம்பர் மாதம் 22 முதல் 26 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாளில் அறிமுகம் செய்ய உள்ளது. இதனால் இந்தியாவில் இந்த பைக்கள் தீபாவளி பண்டிகையை ஒட்டி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

உள்ளூர் மட்டும் சர்வதேச அளவில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்ட ராயல் என்பீல்ட் நிறுவனம், புதியதாக அறிமுகம் செய்ய உள்ள டுவின்-களும் சர்வதேச மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை. சென்னையை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனம் 650cc டுவின்-களை முதலில் கலிபோர்னியாவில் அறிமுகம் செய்தது.

கடந்த 2017ம் ஆண்டு EICMA மோட்டர் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது முதலே ராயல் என்பீல்டின் டுவின் பைக்குகள் இந்தாண்டில் அதிகம் விரும்பப்படும் பைக்காக மாறி விட்டது. முன்னதாக ராயல் என்பீல்ட் நிறுவனம் இந்த பைக்குகளை 2018ம் ஆண்டின் முதல் அரையாண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது. பின்னர் இந்த திட்டம் டெலிவரி மற்றும் ஸ்டாண்டர்ட் தரத்தை உயர்த்தும் நோக்கில் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

இரண்டு வகை பைக்குகளும், நிறுவனத்தின் முதல் 650cc, பேரலல் டூவின், ஆயில்-கூல்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்டு, உள்ளுரிலேயே தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இந்த இன்ஜின்கள் 47.7PS ஆற்றல் மற்றும் 52Nm டார்க்யூகளுடன் வழக்கமான ஃப்யுயல் இன்ஜெக்ஷன்களுடன் வெளி வர உள்ளது. மேலும் இதில் ஆறு-ஸ்பீட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கியர் பாக்ஸ்கள் என்பீல்ட் வகைகளில் பொருத்தப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்கப்பட்ட மோட்டர் சைக்கிளான இன்டர்செப்டர் 650 பைக்குகள், ஓல்டு ஸ்கூல் கலிபோர்னியா குரூஸ்ர்-ஐ நினைவு படுத்தும் வகையில் இருக்கும். கான்டினென்டல் ஜி.டி. 650-கள் ஒரு கபே ரேஸ்-பைக் போன்று இருக்கும்.

Exit mobile version