Automobile Tamilan

பிஎஸ்-4 : 7 லட்சம் டூ வீலர்.., 12,000 கார்கள், 8,000 வர்த்தக வாகனங்கள் கையிருப்பு

hero-xpulse-rally-kit

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு முன்பாக தற்போது கொரானோ வைரஸ் பரவலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் டீலர்களின் கையிருப்பில் 7.20 லட்சம் பிஎஸ்-4 வாகனங்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

7 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 12,000 பயணிகள் வாகனம் மற்றும் 8,000 வர்த்தக வாகனங்கள் என மொத்தமாக விற்பனை செய்யப்படாமல் 7.20 லட்சம் வாகனங்கள் உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக விற்பனை செய்யப்படாமல் உள்ள வாகனங்களை மே மாதம் வரை விற்பனை செய்ய அனுமதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு, உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரனை நாளை நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வமில்லாத நிலையில் உள்ளனர் என்பதே உண்மை..!

Source – TheBusinessLine.com

Exit mobile version