2018 ரெனால்ட் க்விட் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது

0

renault kwid live for more reloaded 2018 edition2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு ரெனால்ட் க்விட் லிவ் ஃபார் மோர் ரீலோடேட் 2018 எடிசன் என்ற பெயரில் சிறப்பு க்விட் காரை ரெனால்ட் இந்தியா நிறுவனம் ரூபாய் 2.66 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

2018 ரெனால்ட் க்விட் ஸ்பெஷல் எடிசன்

சாதாரன மாடலின் விலையில் கிடைக்க தொடங்கியுள்ள சிறப்பு எடிசன்கள் கூடுதலான 10 விதமான வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த மாடல்கள் கிடைக்கப் பெற உள்ளது.

0.8L MT, 1.0L MT மற்றும் 1.0L AMT ஆகிய மூன்று விதமான மாறுபட்ட வகைகளில் கிடைக்க உள்ள க்விட் காரில் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் 0.8L கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.

67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும்.

க்விட் லைவ் ஃபார் மோர் ரீலோடேட் 2018 எடிசனில் தோற்ற அமைப்பில் புதிய செக்டு பாடி கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் மிக நேர்த்தியான சிவப்பு, வெள்ளை, சில்வர், கிரே மற்றும் பிரான்ஸ் ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது. இன்டிரியர் அமைப்பில் 7 அங்குல தொடுதிரை மீடியா சிஸ்டம்,டிஜிட்டல் கிளஸ்ட்டர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற அம்சங்களை பெற்றுள்ளது.

2018 ரெனோ க்விட் விலை பட்டியல்

ரெனால்ட் க்விட் 0.8L MT – ரூ.266 லட்சம், ரெனால்ட் க்விட் 1.0L MT – ரூ.3.57 லட்சம் மற்றும் ரெனால்ட் க்விட் 1.0L AMT – ரூ.3.87 லட்சம்