48 வருட வரலாற்றை கொண்டாடும் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி – வீடியோ

உலக பிரசத்தி பெற்ற லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி காரின் 48 வருட வராலாற்றை அறியும் வகையிலான 2 நிமிட வீடியோ பகிர்வினை ஜாகுவார் லேண்ட்ரோவர் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு டாடா குழுமத்தின் அங்கமாக செயல்படும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி முதல்முறையாக 1969 ஆம் ஆண்டு ப்ரோடோடைப் வடிவத்தை பெற்றது. 170க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ரேஞ்ச் ரோவர் 10 லட்சம் வாகனங்களை கடந்துவிற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி வரலாறு

1969 – முதன்முறையாக ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி மாடலுக்கான ப்ரோடோடைப் வேல்ர் (Velar) என்ற பெயரில் உருவாக தொடங்கியது.

1970 – ரேஞ்ச்ரோவர் கிளாசிக் முன்முறையாக இரு கதவுகளுடன் உற்பத்தி நிலை மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டது.

1973 – ரேஞ்ச்ரோவர் கிளாசிக் காரின் (Suffix C) மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

1981 – ரேஞ்ச்ரோவர் கிளாசிக் (4 door ) 4 கதவுகளை கொண்ட மாடலாக விற்பனைக்கு வந்தது. முதன்முறையாக இதே ஆண்டில் In Vogue என்ற பெயரில் சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பு வெளிவந்தது.

1982 – முதன்முறையாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றது.

1989 – உலகில் முதன்முறையாக ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனை பெற்ற மாடலாக ரேஞ்ச்ரோவர் மாறியது.

1994 – இரண்டாம் தலைமுறை ரோஞ்ச்ரோவர் (P38a) எஸ்யூவி புதிய வடிவ தாத்பரியங்களுடன் பல்வேறு வசதிகளை கொண்ட மாடலாகவும் அறிமுகம் செய்யப்பட்டது.

2001 – மூன்றாம் தலைமுறை ரோஞ்ச்ரோவர் எஸ்யூவி அறிமுகம்

2002 –  500,000 கார்களை உற்பத்தி இலக்கினை எட்டியது

2012 – நான்காம் தலைமுறை ரோஞ்ச்ரோவர் எஸ்யூவி முதன்முறையாக அலுமினிய உலோக கட்டமைப்பில் உருவாகியது. மேலும் உலகின் முதலாவது அலுமினிய உலோகத்தால் கட்டமைக்கப்பட்ட மாடல் என்ற பெருமையும் பெற்றது.

2014 – ரோஞ்ச்ரோவர் எஸ்யூவி லாங் வீல்பேஸ் அறிமுகம்

2015 – ரேஞ்ச்ரோவர் SVAutobiography மாடல் அறிமுகம்

2016 – ரேஞ்ச்ரோவர் SVAutobiography டைனமிக் அறிமுகம்

இதுகுறித்து லேண்ட்ரோவர் வெளியிட்ட வீடியோ பகிர்வு

Share
Published by
automobiletamilan

Recent Posts

புத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…

2021/02/26

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…

2021/02/26

இந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்

அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…

2021/02/25

6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது

5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…

2021/02/24

ரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது

இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…

2021/02/24

சோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.?

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…

2021/02/24