Automobile Tamilan

இந்தியாவில் ஹோண்டா எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்பொழுது..?

honda ev bike concepts

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் பைக் கான்செப்ட்களை காட்சிப்படுத்தியுள்ள நிலையில் இந்திய சந்தைக்கு முதல் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2027 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் பிரத்தியேகமான எலெக்ட்ரிக் பைக் தொழிற்சாலையை 2028 ஆம் ஆண்டு இந்தியாவில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஊடக சந்திப்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் மின் தயாரிப்புகள் மின்மயமாக்கல் வணிகப் பிரிவின் தலைவர் டைகி மிஹாரா பேசுகையில், ஹோண்டா நிறுவனம் 2028 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒரு பிரத்யேக மின்சார மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள மாடல்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Honda EV Fun

நடப்பு 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஹோண்டாவின் உற்பத்தி நிலையை எட்டும் முதல் நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தைக்கான எலெக்ட்ரிக் பைக் மாடல் இவி ஃபன் கான்செப்ட் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சர்வதேச சந்தைக்கான மாடல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹோண்டா நடுத்தர சந்தைக்கான மாடல் மட்டுமல்ல 100சிசி பெட்ரோல் மாடலுக்கு இணையான எலெக்ட்ரிக் பைக் மாடல் 4kWh பேட்டரியுடன் வரக்கூடும் என கூறப்படுகின்றது. 2030 ஆம் ஆண்டுக்குள் ஹோண்டா நிறுவனம் சர்வதேச அளவில் சுமார் 30 வகையான எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை ஸ்கூட்டர் முதல் மோட்டார்சைக்கிள் என அனைத்து வகையான பிரிவிலும் வெளியிட திட்டமிட்டிருக்கின்றது.

ஹோண்டா நிறுவனம் தற்பொழுது இந்திய சந்தையில் QC1 மற்றும் ஆக்டிவா இ என இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஏற்கனவே, ஹோண்டா நிறுவனத்தின் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள நரஸ்புரா ஆலையில் பிரத்தியேகமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்படுவதனால், இதே தொழிற்சாலையை மேம்படுத்தி 2028க்குள் எலெக்ட்ரிக் பைக் தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version