ஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட கோகோரோ குளோபல் நிறுவனத்துடன் இணைந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பேட்டரி மாற்றுவதற்கான நுட்பங்கள் மற்றும் அதற்கான மையங்களை கையாளுவதற்கான நுட்பங்களை பகிர்ந்து கொள்ள உள்ளன.

கோகோரோவின் தொழில்துறையின் திறன் வாய்ந்த முன்னணி பேட்டரி இடமாற்று தளத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக இருநிறுவனங்களும் பேட்டரி மாற்றும் கூட்டு முயற்சியை நிறுவுகின்றன. மேலும், கோகோரோ நெட்வொர்க் வாகனங்கள் ஹீரோ பிராண்ட் மூலம் சந்தைக்கு கொண்டு வர மின்சார வாகன மேம்பாட்டுடன் ஒத்துழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோகோரோ நெட்வொர்க் என்பது ஒரு உயர் திறன் கொண்ட பேட்டரி இடமாற்று தளமாக செயல்படுகின்றது. Frost & Sullivan நிறுவனத்தால் உலகளாவிய ஸ்வாப்பபிள் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தைக்கான 2020 ஆம் ஆண்டின் சிறந்த நிறுவனம் என்ற விருதுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 3,75,000 க்கும் மேற்பட்ட ரைடர்ஸ் மற்றும் 2,000 பேட்டரி இடமாற்ற நிலையங்களுடன், கோகோரோ நெட்வொர்க் 265,000 தினசரி பேட்டரி இடமாற்றுகளை 174 மில்லியனுக்கும் அதிகமான மொத்த பேட்டரி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றது.

ஹீரோ நிறுவனம் முன்பாக ஏத்தர் எலக்ட்ரிக் தயாரிப்பாளருடன் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக கோகோரோ நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் அடுத்த சில மாதங்களுக்குள் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பேட்டரி ஸ்வாப் நுட்பத்துடன் விற்பனைக்கு கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.