பண்டிகை காலத்தை முன்னிட்டு செப்டம்பர் 2025 மாதந்திர விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் ஒட்டுமொத்தமாக 6,87,220 அலகுகளை உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்து முந்தைய ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 8% வளர்ச்சி அடைந்துள்ளது.
உள்நாட்டில் ஜிஎஸ்டி 2.0 எதிரொலி மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹீரோவின் VAHAN தரவுகளின் படி 3,23,320 அலகுகளை விற்றுள்ளதாக பதிவு செய்துள்ள நிலையில் இது முந்தைய ஆண்டை விட 19 % வளர்ச்சியாகும், மேலும் இந்நிறுவனத்தின் சமீபத்திய விடா VX2 அமோக அதரவினை பெற்று 12,736 அலகுகளை பதிவு செய்துள்ளதால் சந்தை பங்கில் 4.7% இலிருந்து 12.2% வரை உயர்வு பெற்றுள்ளது.
125 மில்லியன் இருசக்கர வாகன உற்பத்தி மைல்கல் அடைந்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப் விரைவில் பேஷன் பிளஸ், ஸ்பிளெண்டர்+ மற்றும் விஎக்ஸ்2 பிளஸில் சிறப்பு எடிசனை வெளியிட உள்ளது.
உலகளாவிய வளர்ச்சி
சர்வதேச சந்தைகளில் ஹீரோ மோட்டோகார்ப் வரலாற்றிலேயே அதிகபட்ச Q2 விற்பனையைப் பெற்றுள்ளது. செப்டம்பர் 2025-இல் 39,638 யூனிட்கள் ஏற்றுமதி செய்து, கடந்த ஆண்டை விட 94.8% அதிகரிப்பு. புதிய மாடல்கள் Hunk 125R, Hunk 160, HR Deluxe அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
வாகன விநியோக விபரம்