Automobile Tamilan

ஹோண்டா கார்களுக்கு ரூ.90,000 தள்ளுபடி மார்ச் 2025ல் அறிவிப்பு..!

honda amaze elite

நடப்பு மார்ச் 2025யில் ஹோண்டா நிறுவனத்தின் எலிவேட் எஸ்யூவி உட்பட சிட்டி, இரண்டாம் தலைமுறை அமேஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு ரூ.67,200 முதல் ரூ.90,000 வரை சலுகை கிடைக்கின்றது. கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் வேரியண்ட் மற்றும் டீலர்களிடம் உள்ள கையிருப்பை பொறுத்து மாறுபடக்கூடும்.

ரூ.11.91 லட்சத்தில் துவங்குகின்ற எலிவேட் எஸ்யூவி மாடல் சமீபத்தில் 1 லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ள நிலையில் அபெக்ஸ் எடிசனுக்கு ரூ.45,000 முதல் துவங்கி அதிகபட்ச சலுகை ZX (CVT) & Black மாடலுக்கு ரூ.86,100 வரை வழங்கப்படுகின்றது.

சிட்டி காருக்கு ரூ.73,300 வரையும், சிட்டி e:HEV மாடலுக்கு அதிகபட்ச விலை தள்ளுபடி சலுகை ரூ.90,000 வரை கிடைக்கின்றது.

மேலும் விற்பனையில் உள்ள இரண்டாம் தலைமுறை அமேஸ் காருக்கு S வேரியண்டுக்கு ₹ 57,200 மற்றும் VX மாடலுக்கு ₹ 67,200 வரை கிடைக்கின்றது.

Exit mobile version