Automobile Tamilan

ஏப்ரல் 2025ல் 76,000 வரை தள்ளுபடியை அறிவித்த ஹோண்டா கார்ஸ்

2025 ஹோண்டா சிட்டி அபெக்ஸ் எடிசன்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எலிவேட் எஸ்யூவி மாடலுக்கு அதிகபட்ச தள்ளுபடி ரூ.76,100 வரை வழங்கப்படும் நிலையில், சிட்டி, அமேஸ் உள்ளிட்ட கார்களுக்கும் ஏப்ரல் 30,2025 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேஸ் இரண்டாம் தலைமுறை காரின் S வேரியண்டுக்கு ரூ.57,200 வரை வழங்கப்படும் நிலையில், மூன்றாம் தலைமுறை அமேஸூக்கு கார்ப்ரேட் மற்றும் ஹோண்டா கார் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டாலும் அதன் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

எலிவேட் அபெக்ஸ் வேரியண்ட், மற்ற வேரியண்டுகளுக்கு ரூ.56,100 வரை தள்ளுபடி வழங்கப்படும் நிலையில் டாப் ZX வகைக்கு ரூ.76,100 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டி மற்றும் சிட்டி e:HEV என இரு மாடல்களுக்கும் ரூ.63,000 முதல் ரூ.65,000 வரை தள்ளுபடி சலுகை கிடைக்கின்றது.

கொடுக்கப்பட்டுள்ள சலுகையில், ரொக்க தள்ளுபடி மற்ற போனஸ் உள்ளிட்டவை கொண்டு டீலர்களை பொறுத்து மாறுபடும்.

Exit mobile version