ஹோண்டா சிபி ஷைன் 50 லட்சம் பைக்குகள் உற்பத்தியை கடந்தது

125சிசி இருசக்கர வாகன சந்தையில் முக்கிய மாடலான ஹோண்டா சிபி ஷைன் 50 லட்சம் உற்பத்தியை கடந்துள்ளது. தற்பொழுது 2017 ஹோண்டா சிபி ஷைன் பைக் பிஎஸ் 4 எஞ்சினுடன் ரூ. 65,792 விலையில் விற்பனைக்கு வந்தது.

சிபி ஷைன் பைக்

ஷைன் பைக்கில் 10.16 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.7சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.3 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. எச்இடி நுட்பத்துடன் உள்ள ஷைன் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 65கிமீ ஆகும்.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் இரண்டு சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. மேலும் முன் டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் /130மிமீ டிரம் பிரேக்  மற்றும் பின் டயரில் 130மிமீ டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது. மேலும் காம்பி பிரேக்கிங்  அமைப்பினை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது.

மேலும் முழுமையான விபரம் அறிய ; 2017 ஹோண்டா சிபி ஷைன்

சிபி ஷைன் 50 லட்சம் உற்பத்தி முக்கிய விபரங்கள்

 

Exit mobile version