• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

by MR.Durai
29 November 2025, 8:11 am
in Auto News
0
ShareTweetSend

Indrajaal Ranger

ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரீன் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் புதிய ட்ரோன் எதிர்ப்பு இந்திரஜால் ரேஞ்சர் வாகனம் நவீன தொழில்நுட்பங்களுடன் எல்லைகளில் சவால் விடுக்கும் ட்ரோன்களை கண்டறிந்து அழிப்பதுடன், போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க என பல்வேறு வழிகளில் இந்திய ராணுவம் மற்றும் முக்கிய நபர்களின் பாதுகாப்பிற்கான வாகனமாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த நுட்பங்களுடன் இந்தியாவிலே வடிவமைக்கப்பட்டதாகும்.

Grene ரோபாட்டிக்ஸ் மற்றும் Sigma Advance சிஸ்டம் ஆகிய நிறுவனங்களுடன் இந்திய ஆக்சிலேரேட்டர் மற்றும் ஃபினவால்வு ஆகியவை இணைந்து இந்த அதநவீன நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனத்தை உருவாக்கியுள்ளனர்.

Indrajaal Ranger

தற்பொழுது உள்ள பெரும்பாலான ஆன்டி-ட்ரோன் சிஸ்டம் ஆனது ஒரு இடத்தில் நிரந்தரமாக பொருத்திவிட்டால் அது கண்காணித்து நமக்கான தகவல்களை உடனுக்குடன் வழங்கி வரும் நிலையில், இந்திரஜாலின் ரேஞ்சர் ஆனது டொயோட்டாவின் மிகவும் கரடு முரடான சாலைக்கு ஏற்ற மாடலான ஹைலக்ஸ் வாகனத்தின் பிளாட்ஃபாரத்தை ட்ரோனை எதிர்க்கும் வகையில் மாற்றியமைத்துள்ளதால், நடமாடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், இலகுவாக எந்த இடத்திற்கும், எடுத்துச் செல்ல முடியும் என்பது மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இதன் மூலம் வானத்துல பறக்குற எதிரி ட்ரோனை இது கண்டுபிடிச்சு அழிச்சிடும். இந்தியாவிலே உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் கொண்ட முதல் நடமாடும் வாகனம் இதுதான் என்பது நமக்கெல்லாம் பெருமை.

SkyOS எனப்படுகின்ற மென்பொருள் கொண்டு இருக்கு, இதுதான் இந்த வண்டியோட மூளை மற்றும் கழுகு பார்வக்கான ஆதராமாக செயல்பட்டு கண்ணுக்கே தெரியாத, அதாவது 10 கிமீ தூரத்தில் ஒரு சின்ன ட்ரோன் பறந்து வந்தா கூட, இது கண்டுபிடிச்சி சாதாரண கேமரா ட்ரோனா? இல்லை வெடிகுண்டு வச்சிருக்கா? அல்லது போதைப் பொருள் சார்ந்த ட்ரோனா ? அப்படின்னு சில நொடிகளிலேயே ஸ்கேன் செய்து கண்டுபிடித்து விடும் வகையில் உருவாக்ககியிருக்காங்க.!

எதிரி ட்ரோனை எவ்வாறு வீழுத்தும்.?

அழிப்பதற்காக இந்த இந்திரஜால் ரேஞ்சரில் Jamming, Spoofing, Cyber Takeover, மற்றும் இறுதியாக  Zombee என நான்கு விதமான தாக்குதல் வழிமுறைகளை பின்பற்றும் அதன் விபரம் பின் வருமாறு;-

  • 3 கிமீ தொலைவுக்குள் Jamming எனப்படுதை பயன்படுத்தி அந்த ட்ரோனுக்கும், அதை இயக்குறவனுக்கும் இடையே உள்ள சிக்னலை மறித்து தொடர்பை துண்டிக்க செய்யும், இதனால் நடுவானில் செயலிழக்கச் செய்யும்.
  • 4-5 கிமீ தொலைவுக்குள் இரண்டாவது வழிமுறை Spoofing எனப்படும் ட்ரோனுக்குத் தவறான ஜிபிஎஸ் (GPS) தகவலைக் கொடுத்து, ” தவறான பாதைக்கு திசை திருப்பிவிடும், இதனால் அனுப்பிய எதிரிபகுதிக்கு திரும்ப அனுப்ப முடியும்.
  • இணையம் சார்ந்த மூன்றாவது வழி Cyber Takeover மூலம் எதிரியோட ட்ரோனை நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்து, அதை “ஹேக்” பண்ணி, பத்திரமா கொண்டு வந்து நம்ம இடத்துல தரை இறக்கிடுவாங்க. இதனால அந்த ட்ரோன்ல என்ன இருக்குனு நம்மால் ஆய்வு செய்ய முடியும், இது 4 கிமீ தூரத்தில் நடக்கும்.
  • இறுதியாக, 2 கிமீ தூரத்தில் வந்துவிட்டால் Zombee தாக்குதல் மேல சொன்ன எதுக்கும் அந்த ட்ரோன் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ? நம்ம ரேஞ்சர் வண்டியிலிருந்தே “Zombee” என்ற பெயரில் தற்கொலைப்படை ட்ரோன்  மூலமாக இது வேகமாப் போய், எதிரி ட்ரோன் மேல மோதி, அதைச் சுக்குநூறாக்கிடும்.

பெரிய அளவில் ஆட்கள் தேவையில்லாமல் இரு நபர்களுடன் இயங்கும் இந்த வாகனத்தில் எந்தவித மனித உதவியும் அதிகம் இல்லாமல், தானாகவே சிந்தித்துச் செயல்படும் இந்த இந்திரஜால் ரேஞ்சர், AI நுட்பத்தையும் கொண்டுள்ளது.

Tags: IndiaIndrajaal Ranger
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version