இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தன்னுடைய பைக் மாடல்களின் விலை ரூபாய் 500 முதல் அதிகபட்சமாக ரூபாய் 2200 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஹீரோ நிறுவனம் கடந்த 2016 ஏப்ரல் மாதம் 612,739 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் இதே காலகட்டத்தில் ஏப்ரல் 2017ல் 591,306 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து 3.49 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது. சந்தையில் தொடர் வீழ்ச்சி அடைந்திருந்த பொழுதும் விலையை ஹீரோ உயர்த்தியுள்ளது.
ரூ. 500 விலையை அடிப்படை HF டான் மாடலுக்கும் அதிகபட்சமாக ரூ.2200 வரையிரான விலையை ஹீரோ கரீஷ்மா மாடலுக்கும் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு மே 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அடுத்த வருடம் முதல் பிரிமியம் சந்தையை குறிவைத்து ஹீரோ எக்ஸ்டீரிம் 200 எஸ் , ஹெச்எக்ஸ்250ஆர் போன்ற மாடல்களுடன் ஸ்கூட்டர்களையும் களமிறக்க ஹீரோ திட்டமிட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…
பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை…
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஹேட்ச்பேக் கார்களில் முதன்மையாக விளங்கும் மாருதியின் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய…