4 லட்சம் தள்ளுபடியில் செவர்லே கார்கள் வாங்கலாம்..!

0

அமெரிக்காவின் ஜி.எம் செவர்லே இந்திய சந்தையில் கார் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளதால் இருப்பில் உள்ள மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை தள்ளுபடியை வாரி வழங்கியுள்ளது.

செவர்லே கார்கள்

சில வாரங்களுக்கு முன்னதாக இந்திய சந்தையை விட்டு வெளியேறுவதனை உறுதி செய்த செவர்லே நிறுவனத்தின் கையிருப்பில் உள்ள பீட், க்ரூஸ் மற்றும் ட்ரெயில்பிளேசர் போன்ற மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

குறிப்பாக பீட் காருக்கு ரூ.1 லட்சம் வரை விலை சலுகை வழங்கப்பட்டு தற்போது ரூ. 3 லட்சத்தில் பீட் கார் தொடங்குகின்றது.

செடான் ரக மாடலான க்ரூஸ் மற்றும் முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுகின்ற ட்ரெயில் பிளேசர் மாடலுக்கு ரூ.4 லட்சம் வரை விலை சலுகையை அறிவித்துள்ளது.

சந்தையை விட்டு வெளியேறினாலும் இந்தியாவில் கார் உற்பத்தி செய்வதனை செவர்லே நிறுத்தவில்லை. மேலும் முன்னணி நகரங்களில் தொடர்ந்து டீலர்களை பராமரிக்க செவர்லே திட்டமிட்டுள்ளது என்பதனால் வாடிக்கையாளர்கள் அச்சப்பட தேவையில்லை, என செவர்லே உறுதி அளித்துள்ளது.