ரூ.150 கோடி முதலீட்டில் எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகம்

0

Mg motor india

இந்தியாவில் புதிய எம்ஜி மோட்டார் கார்ப்பரேட் அலுவலகத்தை ரூ.150 கோடி முதலீட்டில் குருகிராம் பகுதியில் அமைக்கின்றது. ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சீன கூட்டாளி நிறுவனமான SIAC கீழ் எம்ஜி மோட்டார் செயல்படுகிறது.

அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில், இந்நிறுவனம் தீவரமான முயற்சியில் டீலர்கள் மற்றும் விளம்பரப்படுத்துதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றது.

இந்த தலைமை அலுவலகத்தில், நிறுவனத்தின் பிரத்தியேக எம்ஜி டீலர்ஷீப் செயல்படுத்தப்பட உள்ளது. இதுதவிர நாடு முழுவதும் உள்ள முன்னணி நகரங்களில் நேரடியான நிறுவன டீலர் மையங்களை திறக்கவும் இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த புதிய அலுவலகத்தில் விற்பனை, விற்பனைக்கு பின் சந்தைப்படுத்தல், தயாரிப்பு திட்டமிடல், டீலர் அபிவிருத்தி, நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களை கவனிக்கும் அலுவலகங்கள் இடம்பெற்றிருக்கும்.

46,000 சதுர அடி பரப்பளவில் தொடங்கப்பட உள்ள எம்ஜி மோட்டாஃ அலுவலகத்தில், பணியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க விளையாட்டுகளை கொண்டதாகவும், இந்த வளாகம் இங்கிலாந்தின் Queen’s Necklace எனப்படுகின்ற வடிவத்தை பின்பற்றி கட்டமைக்கப்பட உள்ளது.

இந்திய சந்தையில் தனது முதல் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மாடலை, 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. இதே காலாண்டில் வணிக அலுவலகமும் திறக்கப்பட உள்ளது.