கார் விலையை ஏப்ரல் முதல் டாடா மோட்டார்ஸ் ரூ.25,000 வரை உயர்த்துகின்றது

0

டாடா மோட்டார்ஸ் கார்கள்

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் , வரும் ஏப்ரல் 1,2019 முதல் தனது கார்களின் விலையை அதிகபட்சமாக ரூபாய் 25,000 வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை  மற்றும் நிலையில்லாமல் மாறி வரும் ரூபாய்க்கு எதிரான மதிப்பு போன்ற காரணங்களால் விலை உயர்த்துவதாக குறிப்பிட்டுள்ளது. முன்பாக கடந்த ஜனவரி 2019-ல் அதிகபட்சமாக ரூபாய் 40,000 வரை கார்களின் விலை உயர்த்தியிருந்தது.

டாடா கார்கள் விலை உயருகின்றது

விலை உயர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மாயன்க் பாரீக் கூறுகையில், மாறிவரும் சந்தையின் தன்மைகள், அதிகரித்துவரும் உற்பத்தி மூலப்பொருட்ளின் செலவுகள், பல்வேறு வெளிப்புற பொருளாதார காரணிகள் ஆகியவை இந்த விலை உயர்வைக் கட்டாயப்படுத்தியுள்ளன.  மேலும் எங்களுடைய பிரசத்தி பெற்ற தயாரிப்புகளான டாடா டியாகோ, டீகோர், நெக்ஸான் மற்றும் ஹாரியர் போன்ற மாடல்களின் விலையும் உயர்த்தப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

டாடா மோடார்ஸ் நிறுவனத்தின் விற்பனை டியாகோ அறிமுகத்திற்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் நெக்ஸான் எஸ்யூவி மற்றும் ஹாரியர் போன்றவை அமோக ஆதரவை பெற்றுள்ளன.