Site icon Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 கார்கள் – மே 2018

இந்திய பயணிகள் கார் சந்தையில் மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், தொடர்ந்து முதலிடத்தில் விளங்கி வருகின்றது. இதனைத் தொடர்ந்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமும் உள்ள நிலையில் மே 2018 மாதந்திர விற்பனையில் டாப் 10 கார்கள் பட்டியலை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

டாப் 10 கார்கள் – மே 2018

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து 50 சதவீத சந்தை பங்களிப்பினை பெற்று விளங்குகின்றது. இதனைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் உள்ள நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய வரவுகளான நெக்ஸான், டீகோர் ,டியாகோ மற்றும் ஹெக்ஸா போன்ற கார்கள் பக்கபலமாக இந்நிறுவனத்துக்கு உள்ளது.

ஃபோர்டு இந்தியா சந்தையில் தொடர்ந்து மிகுந்த சவாலினை எதிர்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம் மொத்தம் 9069 யூனிட்டுகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஹோண்டா அமேஸ் அறிமுகம் செய்த சில வாரங்களில் 9069 கார்களை விற்பனை செய்து இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஹோண்டா சிட்டி கார், டொயோட்டா யாரிஸ் காரிடம் பின் தங்கியுள்ளது.

எஸ்யூவி ரகச் சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா தொடர்ந்து முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து க்ரெட்டா மற்றும் மஹிந்திரா பொலிரோ, ஃபோர்ட் ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளது. எம்பிவி ரகச் சந்தையில் ஆம்னி, ஈக்கோ, இன்னோவா க்றிஸ்டா போன்ற மாடல்கள் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது.

நடுத்தர ரகச் செடான் மாடலில் உள்ள டொயோட்டா யாரிஸ், ஹோண்டா சிட்டி, மாருதி சுசூகி சியாஸ் , ஹூண்டாய் வெர்னா போன்றவை சந்தையில் முன்னணி மாடல்களாக வலம் வருகின்றன.

தொடர்ந்து முழுமையான 2018 மே மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – மே 2018
வ. எண் தயாரிப்பாளர் மே -2018 ஏப்ரல் – 2018
1. மாருதி சுசூகி டிசையர் 24,365 25,935
2. மாருதி சுசூகி ஆல்டோ 21,890 21,233
3. மாருதி சுசூகி பலேனோ 19,389 20,412
4. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 19,208 22,776
5. மாருதி சுசூகி வேகன்ஆர் 15,974 16,561
6. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 15,629 10,818
7. ஹூண்டாய் க்ரெட்டா 11,004   9,390
8. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 10,939 12,174
9. ஹூண்டாய் எலைட் ஐ20 10,664 12,369
10. மாருதி சுசூகி செலிரியோ(Automobile Tamilan) 10,160   9,631

 

Exit mobile version