ஜனவரி 2021 முதல் கியா, ஹூண்டாய் கார்கள் விலை உயருகின்றது

வரும் ஜனவரி 2021 முதல் கியா மோட்டார்ஸ், ஹூண்டாய் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களுடைய கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. முன்பாக மாருதி சுசூகி விலையை ஜனவரி முதல் உயர்த்துவதனை உறுதி செய்திருக்கின்றது.

தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக இரு நிறுவனங்ளும் விலையை அதிகரிக்க உள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட சொனெட், செல்டோஸ் மற்றும் கார்னிவல் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது. கார்னிவல் தவிர மற்ற இரண்டு மாடல்ளின் விலை மட்டும் உயரவுள்ளது. ஆனால் வேரியண்ட் வாரியாக உயர்த்தப்படும் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஹூண்டாய் நிறுவனமும் வேரியண்ட் வாரியாக விலை உயர்வை அறிவிக்கவில்லை. மற்றபடி உற்பத்தி மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதனால் உயர்த்துவதனை தவிர்க்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.

Share
Tags: Kia Seltos