Automobile Tamilan

ஜிஎஸ்டி 2.0, ரூ.1.56 லட்சம் வரை மஹிந்திரா எஸ்யூவிகள் விலை குறைப்பு.!

மஹிந்திரா XUV 3XO REVX

வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பின் கீழ் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ, நியோ, XUV 3XO முதல் தார், ஸ்கார்பியோ, XUV700 போன்ற மாடல்களின் விலை ரூ.1.01 லட்சம் முதல் ரூ.1.56 லட்சம் வரை குறைக்கப்பட உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே செப்டம்பர் 6 ஆம் தேதி முதலே மஹிந்திரா வாடிக்கையாளர்களுக்கு இந்த பலன்களை அறிவித்துள்ளது.

Model Earlier GST + Cess New GST அதிகபட்ச சலுகை
Bolero / Neo 31% 18% ரூ. 1.27 லட்சம்
XUV3XO (Petrol) 29% 18% ரூ. 1.40 லட்சம்
XUV3XO (Diesel) 31% 18% ரூ. 1.56 லட்சம்
Thar 2WD (Diesel) 31% 18% ரூ. 1.35 லட்சம்
Thar 4WD (Diesel) 48% 40% ரூ. 1.01 லட்சம்
Scorpio Classic 48% 40% ரூ. 1.01 லட்சம்
Scorpio-N 48% 40% ரூ. 1.45 லட்சம்
Thar Roxx 48% 40% ரூ. 1.33 லட்சம்
XUV700 48% 40% ரூ. 1.43 லட்சம்

வேரியண்ட் வாரியாக விலை விரைவில் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கிடைக்க உள்ளது.

குறிப்பாக XUV 3XO டீசல் மாடல்களுக்கு அதிகபட்ச சலுகை டாப் வேரியண்டுக்கு ரூ.1.56 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பிரசத்தி பெற்ற XUV700 எஸ்யூவிக்கு முன்பாக 48% வரி வசூலிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது 40% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் ரூ.1.43 லட்சம் வரை சரிந்துள்ளது.

Exit mobile version