Automobile Tamilan

மேஸ்ட்ரோ ஆஃப் டிசைன் மார்செல்லோ காந்தினி புத்தகத்திற்கு விருது வென்ற கவுதம் சென்

இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர் கவுதம் சென் எழுதிய மேஸ்ட்ரோ ஆஃப் டிசைன் : மார்செல்லோ காந்தினி புத்தகத்திற்கு 2016 ஆம் ஆண்டின் மிக அழகான புத்தகம் விருதினை வென்றுள்ளது.

மேஸ்ட்ரோ ஆஃப் டிசைன்

சில நாட்களுக்கு முன்னதாக பாரீஸ் நகரில் நடைபெற்ற 32வது சர்வதேச ஆட்டோமொபைல் விழாவில் புகழ்பெற்ற அட்டோமொபைல் பத்திரிக்கையாளரான கவுதம் சென் எழுதிய மேஸ்ட்ரோ ஆஃப் டிசைன் : மார்செல்லோ காந்தினி 2016 ஆம் ஆண்டின் மிகவும் அழகான புத்தகம் என்ற விருதினை வென்றுள்ளது.

இந்த புத்தகம் உலக புகழ்பெற்ற இத்தாலி கார் டிசைன்  மார்செல்லோ காந்தினி பற்றி சுமார் 800 பக்கங்களுக்கு அவருடைய வடிவமைத்த கார்களை பற்றிய புத்தகமாகும். இரண்டு தொகுதிகளை கொண்டுள்ள புத்தகம் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பக்கங்களை பெற்று 924 படங்களுடன் , 100க்கு மேற்பட்ட கார்களின் வடிவங்களை பற்றி விபரங்களை கொண்டதாகும்.

மார்செல்லோ காந்தினி வடிவமைப்பில்  புகழ்பெற்ற கார்களான லம்போர்கினி மியுரா , கவுன்டச் மற்றும் டையப்லோ ,  ஃபெராரி 308 GT4 , லான்சியா ஸ்ட்ராடஸ்  முதல் தலைமுறை பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் , ஃபோக்ஸ்வேகன் போலோ , புகாட்டி , புகாட்டி சிரோன் , ஆல்ஃபா ரோமியோ மாண்ட்ரீல் , மாசெராட்டி Quattroporte II & IV ,  ஃபியட் X1/9  , ரெனோ மேக்னம் பிக்கப் டிரக் போன்ற பல நிறுவனங்களுக்கும் கார்களை டிசைன் செய்துள்ளார்.

காந்தினி டிசைன் தாத்பரியங்களை பெற்று மிக சிறப்பாக பல தகவல்களை வழங்குகின்ற இந்த புத்தகத்தை டால்டன் வாட்சன் ஃபைன் புக்ஸ் வெளியிட்டுள்ளது.

Exit mobile version