இந்தியாவின் பிரபல ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர் கவுதம் சென் எழுதிய மேஸ்ட்ரோ ஆஃப் டிசைன் : மார்செல்லோ காந்தினி புத்தகத்திற்கு 2016 ஆம் ஆண்டின் மிக அழகான புத்தகம் விருதினை வென்றுள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக பாரீஸ் நகரில் நடைபெற்ற 32வது சர்வதேச ஆட்டோமொபைல் விழாவில் புகழ்பெற்ற அட்டோமொபைல் பத்திரிக்கையாளரான கவுதம் சென் எழுதிய மேஸ்ட்ரோ ஆஃப் டிசைன் : மார்செல்லோ காந்தினி 2016 ஆம் ஆண்டின் மிகவும் அழகான புத்தகம் என்ற விருதினை வென்றுள்ளது.
இந்த புத்தகம் உலக புகழ்பெற்ற இத்தாலி கார் டிசைன் மார்செல்லோ காந்தினி பற்றி சுமார் 800 பக்கங்களுக்கு அவருடைய வடிவமைத்த கார்களை பற்றிய புத்தகமாகும். இரண்டு தொகுதிகளை கொண்டுள்ள புத்தகம் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பக்கங்களை பெற்று 924 படங்களுடன் , 100க்கு மேற்பட்ட கார்களின் வடிவங்களை பற்றி விபரங்களை கொண்டதாகும்.
மார்செல்லோ காந்தினி வடிவமைப்பில் புகழ்பெற்ற கார்களான லம்போர்கினி மியுரா , கவுன்டச் மற்றும் டையப்லோ , ஃபெராரி 308 GT4 , லான்சியா ஸ்ட்ராடஸ் முதல் தலைமுறை பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் , ஃபோக்ஸ்வேகன் போலோ , புகாட்டி , புகாட்டி சிரோன் , ஆல்ஃபா ரோமியோ மாண்ட்ரீல் , மாசெராட்டி Quattroporte II & IV , ஃபியட் X1/9 , ரெனோ மேக்னம் பிக்கப் டிரக் போன்ற பல நிறுவனங்களுக்கும் கார்களை டிசைன் செய்துள்ளார்.
காந்தினி டிசைன் தாத்பரியங்களை பெற்று மிக சிறப்பாக பல தகவல்களை வழங்குகின்ற இந்த புத்தகத்தை டால்டன் வாட்சன் ஃபைன் புக்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் டர்போ வேரியண்டின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, சாதாரண…
சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலில் ரைடிங் மோட் இணைத்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி…
இந்தியாவில் பெரும்பாலான உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோவின் புதிய குஷாக் எஸ்யூவி காரின் இன்டீரியர் டிசைன் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்…
இந்திய சந்தையில் முதன்முறையாக குறைந்த 110சிசி இன்ஜின் பெற்ற பைக் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் விற்பனைக்கு ரூபாய்…
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் குறைவான விலையில் கிடைக்கின்ற பஜாஜின் பிளாட்டினா 100 ES மாடல் விலை ரூ.53,920 ஆக…
ரூ.3.18 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய…