Automobile Tamil

மாருதி சுசுகி இக்னிஸ் ஆக்சசெரீஸ்கள் அறிமுகம்

கடந்த 13ந் தேதி விற்பனைக்கு வந்த மாருதி சுசுகி இக்னிஸ் காருக்கு ஏற்ற ஆக்சசெரீஸ்களை நெக்ஸா அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு விதமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் இக்னிஸ் காருக்கு தேர்ந்தெடுக்கலாம்.

 

மேற்கூரை டிசைன் , தோற்ற அமைப்பு , ஸ்பாய்லர் , கதவு கைப்படி கவர்கள் , கருப்பு வண்ண அலாய்வீல் , பாடி சைட் மோல்டிங் போன்றவற்றுடன் இன்டிரியரில் பல்வேறு வண்ணங்களை இருக்கை கவர்கள் , அம்பியன்ட்லைட் , பின்புற இருக்கைகளுக்கு பொழுதுபோக்கு அமைப்பு , 270 வாட்ஸ் கென்மல்டிமீடியா சிஸ்டம், 140 வாட் சப்வூஃபர் மற்றும் ஹெர்ட்ஸ் 2 சேனல் ஆம்பிளிஃபையர் போன்ற பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளை  இக்னிஸ் கார் பெற்றுள்ளது.

சுசுகி இக்னிஸ் என்ஜின் விபரம்

இந்திய இக்னிஸ் மாடலில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 75 ஹெச்பி பவருடன் , 190 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பெட்ரோல் மாடலில்  1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 83 ஹெச்பி பவருடன் , 113 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க – இக்னிஸ் காரின் விலை விபரங்கள் அறிய

மேலும் முழுமையான சுசுகி இக்னிஸ் துனைகருவிகள் விபரங்கள் அனைத்தும் பிரவுச்சர் படங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. படங்களை பெரிதாக காண படத்தில் க்ளிக் பன்னுங்க..

 

 

[foogallery id=”15569″]

Exit mobile version