டெல்லி IIT- உடன் இணைந்து குழந்தை பாதுகாப்பு App -ஐ உருவாக்கும் எம்ஜி மோட்டார்

டெல்லி IIT- உடன் இணைந்து தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதுடன் அப்ப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி கார்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இணைப்பின் மூலம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புதிய திட்டத்தில் பணியாற்றி வருகிறது. இந்த திட்டம் மூலம் குழந்தைகள் பாதுகாப்புக்காக ஜியோபென்சிங் அப்ளிகேஷனை, ECU கட்டுபாட்டுடன் தயாரித்து வருவதாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அப்ளிகேஷன் விரைவில் இந்தியாவில் வெளியாக உள்ள MG கார்களில் பொருத்தப்படும் என்றும். கார் உரிமையாளர்களுக்கு, காரில் பயணம் செய்யும் குழந்தைககள் பயணத்தின் போது எங்கு உள்ளன என்பதை கண்காணித்து, அறிவிக்கும். இந்த அறிவிப்பில் குழந்தைகள் காரின் உள்ளே ஏறுவதும் மற்றும் இறங்குவதும் போன்றவைகளையும் இடம் பெறும். இதுமட்டுமின்றி அவர்கள் காரில் அமர்ந்திருக்கும் நிலை குறித்தும் கண்காணிக்க முடியும். கார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ரூட் மேப்-ஐ விட்டு வேறு பாதையில் சென்றாலும் அலார்ட் செய்யும் என்றும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.